மேலும் அறிய

கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் செல்லும் தடுப்பூசி

கரூர் மாவட்டத்தில் 6078 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கள் இல்லம் தேடி சென்று ஆம்புலன்ஸ் மூலம் தடுப்பூசி முகாம் நடத்தி வருவதை மாவட்ட சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் குறைந்து கொண்டு வருகிறது. மருத்துவர்கள் 3வது அலையும் பரவ வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 3வது அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் அறிவிப்பின்படி இன்று 41 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 104 நபர்கள் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளன. 

கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் செல்லும் தடுப்பூசி

தமிழக சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மொத்த விவரம் தற்போது காணலாம்: - தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21961 ஆகவும், அதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 20946 ஆகவும், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 673 ஆகவும், கரூர் மாவட்டத்தில் 342 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தற்போது அறிவிப்பை வெளியிட்டது.

கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான சீரிய முயற்சியால் 13 மேற்பட்ட கிராம பஞ்சாயத்து பொது மக்களிடையே காய்ச்சல் முகாமும் நடைபெற்று வருகிறது. இந்த காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் நேரில் சென்று தங்களது உடல் பரிசோதனையை செய்துகொண்டு அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் செல்லும் தடுப்பூசி

கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரத்யேகமான முறையில் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் முகாமில் போடுவதை தற்காலிகமாக மாவட்ட சுகாதாரத்துறை நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 6078 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கள் இல்லம் தேடி சென்று ஆம்புலன்ஸ் மூலம் தடுப்பூசி முகாம் நடத்தி வருவதை மாவட்ட சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் செல்லும் தடுப்பூசி

இந்நிலையில் நாளை பொது மக்களுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போட படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தடுப்பூசி நாளொன்றுக்கு 5000-ம் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் மூலம் போடப்பட்டு வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் காத்துக் கொண்டு இருக்கும் நிலையும் வந்துள்ளது.  ஆகவே, மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி முகாம் இன்னும் கூடுதலாக சிறப்பு மையத்தை ஏற்படுத்தி அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி சென்றடையும், வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி வழங்கி வருவது பலரின் பாராட்டை பெற்றுள்ளது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget