மேலும் அறிய
Advertisement
தூத்துக்குடி மாவட்டத்தில் 72 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று மட்டும் 72 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை முடிந்து 195 பேர் வீடு திரும்பி உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 6 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன..
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,131 ஆக அதிகரித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 374 பேர் உயிரிழந்து உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று மட்டும் 72 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை முடிந்து 195 பேர் வீடு திரும்பி உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 6 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன..
தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுக்கைகள் போதுமான அளவில் உள்ளது.மூன்றாவது அலையில் குழந்தைகள் நோய் தொற்றால் பாதிக்கப்படலாம் என்பதால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தமிழகத்தில் 23 மாவட்டங்களை சேர்ந்த மருத்துவமனைகளுக்கு 1217 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 75 படுக்கைகள், 7000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 75 ஆக்சிஜன் உருளைகள், காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதியுடன் 30 படுக்கைகள், திருச்செந்தூர் மருத்துவமனையில் 10 துவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 32 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம் திரேஸ்புரம், மடத்தூர், குரூஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் உதவிகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion