மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பூஜ்ஜியமாக பதிவானது ஒருநாள் கொரோனா எண்ணிக்கை..

திருவாரூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 16 லட்சத்து 18 ஆயிரத்து 290 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று கொரோரனா தொற்று ஒருவருக்குக் கூட இல்லை.

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில்  கொரோனா தொற்று வேகம் மிக அதிவேகமாக அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று மாதமாக கொரோனா தொற்று வேகம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று  திருவாரூர் மாவட்டத்தில்  கொரோனா தொற்று பாதித்தவர் ஒருவர் கூட இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலாக பரவி வந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பரவல் என்பது கட்டுக்குள் வைக்கப்பட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அனைத்து பொது மக்களும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மேலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து பொதுமக்கள் நடக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பூஜ்ஜியமாக பதிவானது ஒருநாள் கொரோனா எண்ணிக்கை..
மேலும் தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 48 ஆயிரத்து 9 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 ஆயிரத்து 530 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 6 நபர்கள் மட்டும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை 472 நபர்கள் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1242 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 1 நபருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பூஜ்ஜியமாக பதிவானது ஒருநாள் கொரோனா எண்ணிக்கை..

தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மேலும் நடமாடும் மருத்துவமனை என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி என்பது முக்கியமான ஒரு ஆயுதமாகும். மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை மாவட்டம் முழுவதும் முதல் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மொத்தம் 8 லட்சத்து 99 ஆயிரத்து 640 நபர்களும்,இரண்டாம் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 13 ஆயிரத்தி 574 நபர்க்கும், பூஸ்டர் தடுப்பூசி 5076 நபர்களும் என ஒட்டுமொத்தமாக 16 லட்சத்து 18 ஆயிரத்து 290 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget