மேலும் அறிய

விழுப்புரம்‌ : 244 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று! ஒருவர் உயிரிழப்பு..!

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ 244 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, இதுவரை 40850 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களில்‌ 37530 போ்‌ குணமடைந்தனர்‌. 312 போ்‌ உயிரிழந்தனர்‌. இந்த தினசரி பாதிப்பு பொதுமுடக்கம்‌ காரணமாக படிப்படியாகக்‌ குறையத்‌ தொடங்கியது. இந்நிலையில் இன்று (15-06-2021)  244 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருவர் இறந்துள்ளனர். இதே நிலை நீடித்தால்‌, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ குறைந்து, பாதிப்பு வெகுவாகக்‌ குறைய வாய்ப்புள்ளது.  இந்த புள்ளி விவரங்கள்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட விழுப்புரம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌ துறையினர்‌ தெரிவித்தனர்‌. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.

விழுப்புரம்‌ : 244 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று! ஒருவர் உயிரிழப்பு..!

ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 முதல் 500 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகின்றன . மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் கொரோனா வார்டுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. மாவட்டத்தில் ஒரே வீதியில் 3 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமிநாசினியால் நன்கு சுத்தம் செய்யப்படுவதோடு அந்த பகுதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம்‌ : 244 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று! ஒருவர் உயிரிழப்பு..!

அந்த வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நாப்பாளைய தெரு, காமராஜர் வீதி, மகாராஜபுரம் குயவர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட 18 இடங்களும் மற்றும் ஊரக பகுதிகளான அரசூர், திருமுண்டீச்சரம், வி.நெற்குணம், பள்ளித்தென்னல், நன்னாடு, தொடர்ந்தனூர், கூனிமேடு, ஒதியத்தூர், ஆகாசம்பட்டு, கோலியனூர், மாம்பழப்பட்டு உள்ளிட்ட 105 இடங்களும் என மாவட்டம் முழுவதும் 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கிருமி நாசினி திரவத்தால் நன்கு சுத்தம் செய்யப்பட்டதோடு அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கவும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாதவாறு இருக்கவும் அப்பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம்‌ : 244 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று! ஒருவர் உயிரிழப்பு..!

இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் விக்கிரவாண்டி, வானுார், செஞ்சி, திண்டிவனம் ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் விழுப்புரம், திண்டிவனத்தில் தலா ஒரு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது. ஆக்சிஜன் படுக்கைகள் இதில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மொத்தம் 175 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 349 ஆக்சிஜன் படுக்கைகள். இதில், 54 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் 24,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆக்சிஜன் டேங்கர் உள்ளது. இதில், 18,000 முதல் 19,000 லிட்டர் மட்டுமே ஆக்சிஜன் நிரப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget