கடலூர்: 197 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று ! 5 பேர் உயிரிழப்பு !
கடலூர் மாவட்டத்தில் 197 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை 56 ஆயிரத்து 536 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 197 பேருக்கு பாதிப்பு உறுதியானது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 56536 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 53614 போ் குணமடைந்தனர். 719 போ் உயிரிழந்தனர். இந்த தினசரி பாதிப்பு பொதுமுடக்கம் காரணமாக படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்நிலையில் இன்று (20-06-2021) 197 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருவர் இறந்துள்ளனர். இதே நிலை நீடித்தால், கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மேலும் குறைந்து, பாதிப்பு வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் வெளியானவையாகும். வெளி மாவட்டங்களில் பரிசோதனை செய்து பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 21-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28-ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது, இரண்டம் வகையில் இடம்பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
- மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
- அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.
- அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )