கரூர்: 44 பேர் பாதிப்பு..கொரோனா தொற்று இன்றைய நிலவரம்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஒரு வார காலமாக இறப்பு வீதம் இல்லாத நிலையில் இன்று இரண்டு நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் வருகின்ற திங்கள் முதல் ஊரடங்கு தளர்வுகளுடன் புதிய அறிவிப்பு நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரங்களை தற்போது காணலாம்.
கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 44 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கரூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதைத்தொடர்ந்து இன்று கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புவோர் எண்ணிக்கை 78 ஆக உள்ளது.

மேலும் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஒரு வார காலமாக இறப்பு வீதம் இல்லாத நிலையில் இன்று இரண்டு நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேபோல் தற்போது வரை கரூர் மாவட்டத்தில் 392 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் இதுவரை தோற்று பாதித்தவர் நிலவரம் - கரூர் மாவட்டத்தில் இன்றைய தேதிவரை இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர் மொத்த எண்ணிக்கை 22,175 எனவும் ,வீடு திரும்புவோர் எண்ணிக்கை 21,475 தற்போது சிகிச்சையில் 356 நபர்கள் எனவும், கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இதுவரை இறந்தவர் எண்ணிக்கை 344 எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் கரூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் நாள்தோறும் காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நேற்று சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்படாத நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட சிறப்பு முகாம் மூலம் 5000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு இடங்களில் நாள்தோறும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி முகாம் போற்றப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















