TN Corona update : தமிழ்நாட்டில் இன்று கொரோனா வைரசால் எத்தனை பேருக்கு பாதிப்பு? முழு விவரம் உள்ளே..!
தமிழ்நாட்டில் இன்று கொரோனா வைரசால் 366 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 366 ஆகும். இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 49 ஆயிரத்து 373 ஆகும். தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 ஆயிரத்து 745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#TamilNadu | #COVID19 | 28 FEB 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 28, 2022
Today/Total - 366 / 34,49,373
Active Cases - 5,745
Discharged Today/Total - 1,013 / 34,05,624
Death Today/Total - 1 / 38,004
Samples Tested Today/Total - 55,994 / 6,43,98,334@
Test Positivity Rate (TPR) - 0.6%#TNCoronaUpdate #TN pic.twitter.com/8AUWFDhvsv
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,013 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 5 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று 55 ஆயிரத்து 994 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்பு சதவீதம் 0.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் புதியதாக இன்று 96 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் 238 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று புதியதாக 54 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இன்று மட்டும் 153 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் உயிரிழந்த 1 உயிரிழப்பும் கோவையில்தான் நிகழ்ந்துள்ளது.
மேலும் படிக்க : Ungalil Oruvan Book Release: 'சரியாப்போச்சு.. அப்பா பிடிவாதம்'.. அண்ணா சொன்ன வார்த்தை.. சிஎம் விழாவில் வைரமுத்து சொன்ன கதை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )