Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் இன்று 6162 பேர் கொரோனாவால் பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
கேரளாவில் இன்று 12,078 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று 12,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 136 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 11,469 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
கர்நாடகாவில் இன்று 3979 பேர் கொரோனாவால் பாதிப்பு
கர்நாடகாவில் இன்று 3979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 138 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 9768 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழ்நாட்டில் இன்று 6162 பேர் கொரோனாவால் பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 162 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,70,283 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,162 ஆக உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 49 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் மேலும் 4,981 பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.6,464 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.
ஊரடங்கு நீட்டிப்பு - நாளை முதல்வர் ஆலோசனை
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை தொடங்குகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

