Tamil Nadu Coronavirus LIVE News : இன்று ஒரேநாளில் 10,448 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,805 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,25,215 ஆக சரிந்துள்ளது.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இன்று ஒரேநாளில் 10,448 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
இன்று ஒரேநாளில் 10,448 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி திட்டம்- முதல்வர் தொடங்கி வைத்தார்.
கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 இலட்சம் வழங்கும் வைப்புநிதி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
மூன்றாவது அலையை எதிர்க்கத் தயாராகும் டெல்லி அரசு
கொரோனா மூன்றாவது அலையைக் கட்டுபடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5,000 இளைஞர்கள் "சுகாதார உதவியாளர்களாக" பயிற்றுவிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
Chennai Covid-19 Vaccination: 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
சென்னையில் 7464 பேர் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பேரு வருகின்றனர். இதில், 1474 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 2024 பேர் மருத்துவ ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்க்ளில் 47% நபர்கள் நிமோனியா போன்ற தீவிர கொரோனாத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டத்தில் தீவிர பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 24 சதவிகிதமாக உள்ளது
சென்னையின் தற்போது வரை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7876 ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.