Omicron Cases in India: அச்சுறுத்த தொடங்கும் ஒமிக்ரான் - டெல்லியில் மேலும் ஒருவர்
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் 2 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் உறுதியானது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் உறுதியானது. டெல்லியில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் 2 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் உறுதியானது குறிப்பிடத்தக்கது.
First case of Omicron detected in Delhi. Man aged 37 returned from Tanzania, he's admitted to LNJP Hospital with mild symptoms: Officials
— Press Trust of India (@PTI_News) December 5, 2021
Samples of 12 out of 17 positive passengers were sent for genome sequencing and one of them, who arrived from Tanzania, tested Omicron positive according to preliminary reports: Delhi Health Minister Satyendar Jain pic.twitter.com/PNtcw5b5GY
— ANI (@ANI) December 5, 2021
ஒமிக்ரான் திரிபு முதல் முதலாக தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவியது.
இது மிகவும் வீரியமிக்கது என்றும் அதிவிரைவில் பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இதன் வேகம் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காக, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டது.
அந்தவகையில் ஒமிக்ரான் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கர்நாடகாவில் 2 பேருக்கும், குஜராத் மற்றும் மும்பையில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதாக மத்திய அரசு நேற்று அறிவித்த நிலையில், இன்று டெல்லியில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )