Omicron Cases India: ஆந்திராவுக்கும் பரவியது ஒமிக்ரான்...! ஒருவருக்கு பாதிப்பு கண்டுபிடிப்பு!
ஆந்திராவில் ஒருவரும் ஒமிக்ரான் உறுதியானதை தொடர்ந்து, இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் இருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினம் வந்த 34 வயது நபருக்கு ஒமிக்ரான் உறுதியானதாக தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆந்திரா வந்தவர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆந்திர சுகாதாரத்துறை கூறியுள்ளது.
First case of #Omicron variant of coronavirus detected in Andhra Pradesh pic.twitter.com/qiV9F4CtPg
— ANI (@ANI) December 12, 2021
இதேபோல், சண்டிகரிலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
’நவம்பர் 22 அன்று இந்தியாவிற்கு வந்த இத்தாலியைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு, டிசம்பர் 1 ஆம் தேதி ஒமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ஃபைசர் தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது. அவருக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என சண்டிகர் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
A 20-year-old man from Italy, who landed in India on Nov 22 & was diagnosed with COVID on Dec 1, has tested positive for #Omicron variant. He is fully vaccinated with Pfizer vaccine. He has been tested for COVID-19 again today & the report is awaited: Chandigarh Health department
— ANI (@ANI) December 12, 2021
ஆந்திரா மற்றும் சண்டிகரில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியானதை தொடர்ந்து, இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )