Pregnancy Vaccination FAQs : கோவாக்சினா? கோவிஷீல்டா? கர்ப்பிணிகளுக்கு எது பாதுகாப்பு?
கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஏன் முக்கியம்? எந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்? எந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ளக்கூடாது? விளக்கமளிக்கிறார் மருத்துவர் ஸ்ரீகலா ப்ரசாத்.
கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தலின் அடுத்தகட்டமாக கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்பதை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்புசத்து தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்த தடுப்பூசி தொடர்பான ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
#LargestVaccineDrive#Unite2FightCorona #COVID19 Vaccination Update
— Ministry of Health (@MoHFW_INDIA) July 2, 2021
➡️ Pregnant Women now eligible for #COVID19 Vaccination.https://t.co/F9MH6jDYU0 pic.twitter.com/lkkD7G7JxF
'கர்ப்பிணிகளும் இனி கோவின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது தடுப்பூசி மையத்துக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம்’ என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும்போது பின்பற்ற வேண்டியவை, அதற்கான மருத்துவ அதிகாரிகளுக்கான கிட்கள் மற்றும் இதர தகவல்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் பகிரப்பட்டுள்ளது’ என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்வழியாக கர்ப்பிணிகள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தாமே முடிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் கர்ப்பிணிகளின் கேள்விகளும் அதற்கான பதில்களும்:
தடுப்பூசி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானதா என அடிப்படையான சில கேள்விகள் கர்ப்பிணிகளுக்கு எழுந்துள்ளன.. இதுதொடர்பான கேள்விகளை பிரபல பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத்திடம் கேட்டோம்...
கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஏன் முக்கியமானது?
இரண்டாம் அலை கொரோனா காலக்கட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் அதிகமாக இறந்தனர். பேறுகாலத்தில் கர்ப்பிணிகள் இறப்பதைத் தடுக்க ஏற்கெனவே நாம் பலகாலமாகப் போராடி வருகிறோம். அதுவும் நீரிழிவு, ரத்த அழுத்தம் என உடன்நோய்கள் ஏதும் இல்லாமல் கொரோனாவால் கர்ப்பிணிகள் இறப்பதைப் போன்ற மனவேதனை வேறு எதுவும் இருக்க முடியாது. தடுப்பூசி போட்டதற்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் தீவிரத் தன்மையைத் தடுக்கிறது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானதா?
பாதுகாப்பானது. முக்கியமாக வெளிநாடுகளில் ஏற்கெனவே கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கிவிட்டார்கள். அதன் அடிப்படையிலேயே இங்கே அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. குழந்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்வதைப் பரிந்துரைக்கிறேன். தடுப்பூசிகளில் பிரச்னையே இல்லை என்று சொல்லமாட்டேன், ஆனால் இறப்பு விகிதமும் தடுப்பூசியால் தடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் எந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்?
கோவாக்சின் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் எந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ளக்கூடாது?
கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைப்பதில்லை. அதில் அடினோ வைரஸ் என்னும் வேறோரு வகை வைரஸ் உள்ளது காரணம்.
எந்த ட்ரைமெஸ்டரில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்?
அனைத்து ட்ரைமெஸ்டரிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. குழந்தைபெற்றுக்கொள்ளத் திட்டமிடும் ஜோடிகள் முன்னமே தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது நல்லது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வது கருவில் இருக்கும் சிசுவை பாதிக்குமா?
கோவாக்சின் தடுப்பூசியைப் பொருத்தவரை ஏற்கெனவே கொல்லப்பட்ட கொரோனா வைரஸ்தான் உடலில் செலுத்தப்படுகிறது.அதனால் அது எந்தவகையான பாதிப்பையும் சிசுவுக்கு ஏற்படுத்தாது.
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா?
தாராளமாகச் செலுத்திக்கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )