மேலும் அறிய

Mayiladuthurai Coronavirus: ஒன்றரை ஆண்டு எண்ணிக்கை; ஒரு மாதத்தில் முறியடித்த கொரோனா!

ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில், கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை சரி பாதிக்கு மேல் உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். 

Mayiladuthurai Coronavirus: ஒன்றரை ஆண்டு எண்ணிக்கை; ஒரு மாதத்தில் முறியடித்த கொரோனா!

இந்நிலையில் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்தாலும்,  ஒரு சில மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜுன் 14 தேதிக்கு பின் மேலும்  தளர்வுகளை அதிகப்படுத்தியும், அதிகமான மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழ்நாடு அரசு நீட்டிப்பு செய்துள்ளது. தொற்று அதிகரித்து காணப்படும் மாவட்டங்களின் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமும் ஒன்று.

Mayiladuthurai Coronavirus: ஒன்றரை ஆண்டு எண்ணிக்கை; ஒரு மாதத்தில் முறியடித்த கொரோனா!

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்தின் ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்ட கொரோனா வைரஸ் தொற்றின் விபரங்களை இதில் காண்போம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடந்த மே மாதம் 13 ம் தேதி வரை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் தொற்றால் பார்த்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 630 பேர் மட்டுமே. ஆனால், தற்போது கடந்த மே 13 -ம் தேதிக்கு பின் ஜுன் 13 இன்று வரை 18 ஆயிரத்து 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகள் பதிவை ஒரே மாதத்தில் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொற்றால் பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதேபோன்று கடந்த மாதம் வரை 212 இருந்தது, இந்த ஒரு மாத காலத்தில் சரி பாதிக்கு மேல் உயர்ந்து 242 பதிவாகியுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக மே 26 ம் தேதி 820 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோல் மே 25 ம் தேதி 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Mayiladuthurai Coronavirus: ஒன்றரை ஆண்டு எண்ணிக்கை; ஒரு மாதத்தில் முறியடித்த கொரோனா!

இதுவரை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 695 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 31 ஆயிரத்து 737 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 323 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 598 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர். இதனால் எண்ணிக்கை மாவட்டத்தில் 454 ஆக உயர்ந்துள்ளது.

Mayiladuthurai Coronavirus: ஒன்றரை ஆண்டு எண்ணிக்கை; ஒரு மாதத்தில் முறியடித்த கொரோனா!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 3 ஆயிரத்து 504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Mayiladuthurai Coronavirus: ஒன்றரை ஆண்டு எண்ணிக்கை; ஒரு மாதத்தில் முறியடித்த கொரோனா!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து ஆயிரத்து 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கடந்த 3 தினங்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் தடுப்பூசி நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது எனவும் தற்போது போதுமான அளவிற்கு தடுப்பூசி பெறப்பட்டுள்ளது என்றும், மேலும் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
Embed widget