WHO: கொரோனா மரணங்களை மூடி மறைத்ததா இந்தியா? WHO வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
உலகளவில் கொரோனா தொற்றுநோய் இறப்பு எண்ணிக்கை தோராயமாக 14.9 மில்லியன் ஆகும். இது 13.3 மில்லியன் முதல் 16.6 மில்லியன் வரை இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021க்கு இடையில் இந்தியாவில் 4.7 மில்லியன் எண்ணிக்கையில் அதிகமான கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதாரம் தெரிவித்திருந்தது. இந்த கொரோனா உலகளவில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகளை விட மூன்று மடங்கு அதிகமான உயிர்களைக் கொன்றது. அதாவது மொத்தம் சுமார் 14.9 மில்லியன் உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேலும், இந்தியாவில் கொரோனா தொற்றால் சுமார் 47 லட்சம் பேர் இறந்து இருக்கலாம் என்றும், இது உலகிலேயே மிக அதிகம் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
இந்தியா தெரிவித்த இறப்பு எண்ணிக்கை என்ன..?
ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021 வரை இந்தியாவின் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கை 481,486 என தெரிவித்தது. ஆனால், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா இறப்புகள் துல்லியமாக 47,40,894 என்று கூறுகிறது.
உலகளவில் கொரோனா தொற்றுநோய் இறப்பு எண்ணிக்கை தோராயமாக 14.9 மில்லியன் ஆகும். இது 13.3 மில்லியன் முதல் 16.6 மில்லியன் வரை இருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா :
உலக சுகாதார மையம் தனது அறிக்கையை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே, மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது அதில், அதிகப்படியான இறப்பு மதிப்பீட்டைக் கணக்கிடுவதற்கான கணித மாதிரியின் உண்மையான தரவுகளின் இருப்பைக் கருத்தில் கொண்டு அதைப் பயன்படுத்துவதற்கு தனது ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளது. மேலும் பயன்படுத்தப்பட்ட மாதிரிகளின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் உறுதித் தன்மை மற்றும் தரவு சேகரிப்பு முறை ஆகியவை கேள்விக்குரியவையாக உள்ளது என்று அது கூறியுள்ளது.
அந்த அறிக்கையில் இந்த மாடலிங் பயிற்சியின் செயல்முறை, வழிமுறை மற்றும் விளைவுகளுக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்த போதிலும், உலக சுகாதார மையம் இந்தியாவின் கவலைகளை போதுமான அளவு கவனிக்காமல் அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகளை வெளியிட்டது. இந்தியாவின் ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் (RGI) மூலம் சிவில் பதிவு அமைப்பு (CRS) இந்த அறிக்கையை வெளியிட்டது. மேலும் இந்தியாவிற்கான அதிகப்படியான இறப்பு எண்ணிக்கையைக் கணிக்க கணித மாதிரிகள் பயன்படுத்தப்படக்கூடாது. "இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மிகவும் வலுவானது மற்றும் பல தசாப்தங்கள் பழமையான சட்டப்பூர்வ சட்ட கட்டமைப்பால் அது நிர்வகிக்கப்படுகிறது அது கேள்விக்குறியவை அல்ல" என்று சிவில் பதிவு அமைப்பு அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியாவில் மே 3 ஆம் தேதி நிலவரப்படி அதிகாரப்பூர்வமான கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 5,22,676 ஆகும்.
தனது உறுப்பு நாடுகளை அடுக்கு I மற்றும் II என வகைகளாகப் பிரிக்க உலக சுகாதார மையம் பயன்படுத்தும் அளவுகோல்களில் உள்ள முரண்பாடுகள் மற்றும் இந்தியாவை அந்த அடுக்குகளில் இரண்டாவது வகைக்குள் வைப்பதற்கான காரணங்களை அது சுட்டிக்காட்டுவதாக அரசு கூறியுள்ளது.
திறம்பட மற்றும் உறுதியான சட்ட அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட இறப்புத் தரவுகளின் துல்லியத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்தியா இரண்டாம் நிலை நாடுகளில் இடம்பெறத் தகுதியற்றது என்ற காரணத்தை இந்தியா முன்வைத்துள்ளது. உலக சுகாதார மையம் இன்றுவரை இந்தியாவின் இந்த வாதத்திற்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )