மேலும் அறிய

மயிலாடுதுறை: ஒரு மாதமாக, சராசரியாக தொடரும் 10 கொரோனா மரணங்கள் : அச்சத்தில் மக்கள்!

ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தினம் தோறும் சராசரியாக 10 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துவருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு பல்வேறு நாடுகளும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் சிறிதளவு குறைந்தாலும்,  ஒரு சில மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜுன் 7 தேதிக்கு பின் சில தளர்வுகளை அதிகப்படுத்தியும், அதிகமான மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடன் ஊரடங்கு தமிழ்நாடு அரசு நீட்டிப்பு செய்துள்ளது. தொற்று அதிகரித்து காணப்படும் மாவட்டங்களின் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டம் இடம்பிடித்துள்ளது.

குறிப்பாக ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 951 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 30 ஆயிரத்து 448 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 482 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 573 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 434 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 4 ஆயிரத்து 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து ஆயிரத்து 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், மேலும் தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், தடுப்பூசி பெற்றவுடன் மீண்டும்  நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரும் எனவும் நாளை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தடுப்பூசி வந்துவிடும் என்றும் நாளை அல்லது நாளைய மறுதினம் முதல் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடரும் என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Trump on Alert: எச்சரித்த ஈரான்; விடுமுறையை பாதியில் முடித்து திரும்பிய ட்ரம்ப்; மத்திய கிழக்குக்கு விரையும் US குண்டுவீச்சு விமானம்
எச்சரித்த ஈரான்; விடுமுறையை பாதியில் முடித்து திரும்பிய ட்ரம்ப்; மத்திய கிழக்குக்கு விரையும் US குண்டுவீச்சு விமானம்
Annamalai:
Annamalai: "லண்டனிலே பணம் இல்லை.. தமிழ்நாட்டிற்கு கொடுக்க அவங்களுக்கு ஏது காசு?" விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
TVK Vs DMK: முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
Womens Asian Games: சதம் விளாசிய ஷபாலி.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் தங்கம் வெல்லுமா இந்தியா?
Womens Asian Games: சதம் விளாசிய ஷபாலி.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் தங்கம் வெல்லுமா இந்தியா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump on Alert: எச்சரித்த ஈரான்; விடுமுறையை பாதியில் முடித்து திரும்பிய ட்ரம்ப்; மத்திய கிழக்குக்கு விரையும் US குண்டுவீச்சு விமானம்
எச்சரித்த ஈரான்; விடுமுறையை பாதியில் முடித்து திரும்பிய ட்ரம்ப்; மத்திய கிழக்குக்கு விரையும் US குண்டுவீச்சு விமானம்
Annamalai:
Annamalai: "லண்டனிலே பணம் இல்லை.. தமிழ்நாட்டிற்கு கொடுக்க அவங்களுக்கு ஏது காசு?" விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
TVK Vs DMK: முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
Womens Asian Games: சதம் விளாசிய ஷபாலி.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் தங்கம் வெல்லுமா இந்தியா?
Womens Asian Games: சதம் விளாசிய ஷபாலி.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் தங்கம் வெல்லுமா இந்தியா?
Ukraine Attack Russia: ஆத்தாடி, 1600 ட்ரோன்களா.! ரஷ்யாவை சரமாரியாக போட்டு சாத்திய உக்ரைன்; 2 ரஷ்யர்கள் உயிரிழப்பு
ஆத்தாடி, 1600 ட்ரோன்களா.! ரஷ்யாவை சரமாரியாக போட்டு சாத்திய உக்ரைன்; 2 ரஷ்யர்கள் உயிரிழப்பு
Tomahawk EV Review: எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் ஈவி எப்படி இருக்கு.? ஹைப் கொடுக்கப்படும் அளவுக்கு தகுதியானதா.? ரிவ்யூவ்
எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் ஈவி எப்படி இருக்கு.? ஹைப் கொடுக்கப்படும் அளவுக்கு தகுதியானதா.? ரிவ்யூவ்
Iran Warns Trump: ட்ரம்ப்புக்கு 7 கன்டிஷன்கள்; ‘CODE 100‘ வார்னிங் கொடுத்த ஈரான்; அலெர்ட் மோடில் அமெரிக்கா, இஸ்ரேல்.!
ட்ரம்ப்புக்கு 7 கன்டிஷன்கள்; ‘CODE 100‘ வார்னிங் கொடுத்த ஈரான்; அலெர்ட் மோடில் அமெரிக்கா, இஸ்ரேல்.!
காட்டுல உங்க EV கார் திடீர்னு நின்னுடுச்சுனா என்ன பண்றது.? பயப்படாதீங்க, அதுக்கான தீர்வு இதோ
காட்டுல உங்க EV கார் திடீர்னு நின்னுடுச்சுனா என்ன பண்றது.? பயப்படாதீங்க, அதுக்கான தீர்வு இதோ
Embed widget