மேலும் அறிய

திருவண்ணாமலை : புதிதாக இன்று 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலையில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் இன்று 592 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு இன்று உயிரிழப்பு இல்லை .

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,454 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1ம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 6 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றினால் பாதித்தோரின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்திருந்தது. இதுவரை மாவட்டத்தில் 60 ஆயிரத்து 365 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 56 ஆயிரத்து 686  பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 592 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று  உயிரிழப்பு இல்லை

திருவண்ணாமலை : புதிதாக இன்று 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

  இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 677-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று க்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கலூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 3008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாகக்‌ அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌.

திருவண்ணாமலை : புதிதாக இன்று 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்றைய கொரோனா தடுப்பூசி நிலவரம் 

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தோற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்கள பணியாளர்களுக்கு  பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என, மத்திய அரசு அறிவித்த நிலையில், நாடு முழுவதும்  பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முகாமினை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து,   அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்களுக்குப் பின்பு இந்த பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டது.தொடங்கப்பட்ட கொரோனா பூஸ்டர் தடுப்பு ஊசியை அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் இன்று 270 நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில் மாவட்ட முழுவதும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசியை  4700 நபர்கள் செலுத்திக்கொண்டனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் அனைத்து மையங்களிலும் பூஸ்டர் தடுப்பு ஊசிக்கு தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எந்த நிறுவனம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது அதே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
DMK vs CM Vijay : வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Embed widget