மயிலாடுதுறை: புதிதாக 9 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தொற்றின் எண்ணிக்கை 23,192 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மட்டும் 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட ஒருவருக்கு தொற்று குறைவு. இதுவரை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 192 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 719 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 9 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 27 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 315 ஆக தொடர்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 21 ஆயிரத்து 101 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், முதல் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 84 ஆயிரத்து 508 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேருக்கும் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், கோவாக்சின் 85 ஆயிரத்து 455 பேருக்கு கோவிஷீல்ட் 9 லட்சத்து 35 ஆயிரத்து 646 பேருக்கும் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கொரோனா அப்டேட்..
#TamilNadu | #COVID19 | 20 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 20, 2021
Today/Total - 1,170 / 26,90,633
Active Cases - 14,058
Discharged Today/Total - 1,418 / 26,40,627
Death Today/Total - 20 / 35,948
Samples Tested Today/Total - 1,28,759 / 4,97,92,210***
Test Positivity Rate (TPR) - 1.0%#TNCoronaUpdate #TN pic.twitter.com/gzrh4Zm5AZ
Before You Go
Saranya Ponvannan | ‘’தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையுமா?’' நடிகை சரண்யா TIPS
ட்ரெண்டிங் செய்திகள்






















