தொடர்ந்து இரண்டு நாட்களாக கொரோனா இல்லாத மாவட்டமானது மயிலாடுதுறை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படாததை அடுத்து தொற்றின் எண்ணிக்கை 23,321 ஆக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை. இதுவரை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 321 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 972 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று 3 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியானவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 316 ஆக தொடர்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
ஒருகிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 44 ஆயிரத்து 11 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், முதல் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 21 ஆயிரத்து 796 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 3 லட்சத்து 22 ஆயிரத்து 215 பேருக்கும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், கோவாக்சின் 91 ஆயிரத்து 321 பேருக்கு கோவிஷீல்ட் 10 லட்சத்து 52 ஆயிரத்து 690 பேருக்கும் போடப்பட்டுள்ளது.
வகுப்பிற்கு வர முடியல... தயவு செய்து பள்ளியை விட்டு போங்க’ ஆசிரியரிடம் கெஞ்சிய மாணவி!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Before You Go
Saranya Ponvannan | ‘’தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையுமா?’' நடிகை சரண்யா TIPS
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















