Coronavirus LIVE Updates: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,668 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,97,603 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 199 பேரும், சென்னையில் 185 பேரும், ஈரோட்டில் 158 பேரும், தஞ்சாவூரில் 102 பேரும் சேலத்தில் 98 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு, தொடர்ந்து 54 நாட்களாக 50,000க்கும் குறைவாக உள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: 1,887 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,43,319 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர். அதே சமயம், நாடு முழுவதும் 36,555 பேர் குணமடைந்தனர். தேசியளவில் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.53 சதவிகிதமாக உள்ளது . 2020 மார்ச்சிலிருந்து இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.
இறப்பு எண்ணிக்கை: கொரோனா தொற்று காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,663 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8374 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் (243) பதிவு செய்துள்ளது. கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது.
புதுச்சேரியில் மேலும் 59 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 1,22,832 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,20,116 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.




















