மேலும் அறிய

மயிலாடுதுறை: அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 27 பேருக்கு தொற்று!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தொற்றின் எண்ணிக்கை 21,517 ஆக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்  காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

மயிலாடுதுறை: அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 27 பேருக்கு தொற்று!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் சற்று அச்சமடைய தொடங்கியுள்ளனர். இன்று மட்டும் 27 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட 2 பேருக்கு குறைவு என்றாலும் பரிசோதனை அடிப்படையில் இது அதிகம். இதுவரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 517 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 20 ஆயிரத்து 957 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 27 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 29 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 274 ஆக தொடர்கிறது.

மயிலாடுதுறை: அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 27 பேருக்கு தொற்று!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

ஒருகிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 71 ஆயிரத்து 657 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், முதல் தவணை தடுப்பூசி 4 லட்சத்து 10 ஆயிரத்து 804 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 60 ஆயிரத்து 853 பேருக்கும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், கோவாக்சின் 51 ஆயிரத்து 623 பேருக்கு கோவிஷீல்ட் 4 லட்சத்து 20 ஆயிரத்து 34 பேருக்கும் போடப்பட்டுள்ளது எனவும், நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி  தொடரப்பட்டுள்ளது என்றும். இன்று மட்டும் 3911 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 884 ஆண்களுக்கும், 2 லட்சத்து 41 ஆயிரத்து 702 பெண்களுக்கும், திருநங்கைகள் 71 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
Manali Oil Godown Blast: 60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
Upcoming E Scooters: இன்னும் 6 மாசம்தான்! இந்தியாவில் வரப்போகும் அசத்தலான E Scooters லிஸ்ட்! என்னென்ன?
Upcoming E Scooters: இன்னும் 6 மாசம்தான்! இந்தியாவில் வரப்போகும் அசத்தலான E Scooters லிஸ்ட்! என்னென்ன?
ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
Embed widget