சேலம்: இன்று 175 பேருக்கு கொரோனா பாதிப்பு - 9 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக படியாக சேலம் மாவட்டத்தில் 9 பேர் உயிரிழப்பு.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1512 ஆக உள்ளது. மேலும் 238 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 87272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90869 ஆக உயர்வு. மாவட்டத்தில் 2086 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து இரண்டாம் அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை 90 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அமைத்து நாள்தோறும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

சேலம் மாநகராட்சி பகுதியில் மொத்தமுள்ள 60 டிவிசன்களில் 80 முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக சேலம் மாவட்ட அளவில் ஆயிரத்தை தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 200 க்கும் கீழ் குறைந்துள்ளது. எட்டாம் நாளாக தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த பொது மக்கள் இன்றும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,13,245 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு அதிகப்படியான தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும் சேலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் இன்றைய உயிரிழப்பு அதிகமாக உள்ளது .

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு : தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 59 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று இருவர் உயிரிழப்பு. மேலும் 76 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 780 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 54 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 61 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 716 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 775 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.1,48,182 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,775 ஆக உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















