Vellore : 113 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : தடுப்பூசி செலுத்தும் பணிகளின் நிலவரம் என்ன?
5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட வேலூர் மாநகராட்சி பகுதியில் சராசரியாக 500 நபர்கள் வரை கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் . இன்று 9 நபர்கள் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர் .
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் பாதிப்பு குறைந்து வருவதாக அதிகாரிகள் மகிச்சியுடன் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை மார்ச் மாத இறுதியில் தொடங்கினாலும் , ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து பரவல் வேகமாக இருந்தது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும் தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துவந்தனர். ஒருநாள் கொரோனா நோயின் பாதிப்பு ஆயிரத்தைத்தாண்டி பதிவாகி வந்தது .
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளிலும் மட்டும் இருந்து தினசரி 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டு , வேலூர் மாவட்டத்தின் மொத்த தொற்று எண்ணிக்கை 4000-ஐ கடந்தது . மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பாதிப்பு இல்லாத தெருக்களே இல்லை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனை கட்படுத்தும் நடவடிக்கையாக, பாதிப்பு அதிகம் காணப்பட்ட தெருக்களை, தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வெளியாட்கள் நுழைவதற்கும் ,வாகன போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
மேலும் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை , மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அங்காங்கே , வாகன சோதனைகள் நடத்தி , தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் , மற்றும் முகக்கவசம் அணியாதவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு சதவீதம் வெகுவாக குறைய தொடங்கியது. இதன்காரணமாக தற்பொழுது 5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட வேலூர் மாநகராட்சி பகுதியில் சராசரியாக 500 நபர்கள் வரை கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று 9 நபர்கள் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர் .
இதுகுறித்து நம்மிடம் பேசிய, வேலூர் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் மணிவண்ணன், நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் 643 நபர்கள் சிகிச்சையில் இருந்த சூழ்நிலையில் , இன்று குணமடைந்து வீடு திரும்பியர்கள் எண்ணிக்கை 443-ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிய தொற்றாளர்களாக 113 நபர்கள் அடையளம் காணப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கபட்டுவருகிறது. நோய் தொற்றின் தீவிரத்தால் இன்று 8 நோயாளிகள் உயிரிழந்த நிலையில் , வேலூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 305-ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக மணிவண்ணன் தெரிவித்தார் .
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )