நெல்லை 43 பேருக்கும் , தூத்துக்குடியில் 26 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி..
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 28 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37326-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 153 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 35882ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 662 இருக்கிறது. இந்நிலையில் 782 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேனி , நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசாரித்தோம்.
தேனி மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50499ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 211 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 49175ஆக அதிகரித்துள்ளது. இன்று வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 532 இருக்கிறது. இந்நிலையில் 792 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 43 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61122 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 284 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 56782ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 443 இருக்கிறது. இந்நிலையில் 1554 கொரோனா பாதிப்பால் நெல்லை சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 26 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62480-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 179 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 60482-ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 444 இருக்கிறது. இந்நிலையில் 788 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.