மேலும் அறிய

Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 26 பேர் உயிரிழப்பு!

கொரோனாவால் மேலும் 26 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,076 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. சில தினங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 990 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,57,927 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,990 ஆக அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  61 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 326 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 175 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 204 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 175  ஆக உள்ளது. 

கோவை 230, ஈரோடு 180, தஞ்சை 126, சேலம் 79, திருப்பூர் 95, செங்கல்பட்டு 133, கடலூர் 64, திருச்சி 69, திருவள்ளூர் 95, நாமக்கல் 58, கள்ளக்குறிச்சி 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் மேலும் 26 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,076 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 4 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று உயிரிழப்பு இல்லை. சென்னையில் மட்டும் மொத்தம் 8318 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக  திருப்பூரில் 5 பேரும், சேலத்தில் 4 பேரும், உயிரிழந்துள்ளனர். 23 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,524 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,156 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,06,961 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

12 வயதிற்குட்பட்ட 118 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39,577 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24,989 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7525 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget