கரூர் : மெகா தடுப்பூசி முகாம் 4 | நேற்று, 17032 தடுப்பூசிகள் போடப்பட்டன..
அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் 425 நபர்களும், சுய உதவிக் குழுவினர் 425 நபர்களும், மற்றும் ஆசிரியர்கள் 850 நபர்களும் இந்த சிறப்பு முகாமில் பணியாற்றியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு முயற்சிகளின் வழியாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. நான்காவது மெகா தடுப்பூசி முகாம் 425 இடங்களில் 17032 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒரே நாளில் 500 இடங்களில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் போட திட்டங்கள் தீட்டப்பட்டு தடுப்பூசி முதல் முகாமில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட, அதைத் தொடர்ந்து இரண்டாவது வார தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரத்தில் அதிக அளவில் தடுப்பூசி போட ஆலோசனை பேரில் 640 இடங்களில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. அதேபோல் 36 வார தடுப்பூசி சிறப்பு முகாமில் 140 இடங்களில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டன என்றார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்நிலையில் நான்காவது வாரமாக தடுப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் 425 இடங்களில் 17,032 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் தவணை தடுப்பூசியை 8105 நபர்களுக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி 8 ஆயிரத்து 933 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. இந்த நான்காவது வார சிறப்பு தடுப்பூசி முகாமில் செவிலியர்கள் 425 நபர்களும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் 425 நபர்களும் சுய உதவிக் குழுவினர் 425 நபர்களும் மற்றும் ஆசிரியர்கள் 850 நபர்களும் இந்த சிறப்பு முகாமில் பணியாற்றியுள்ளனர். இந்த நான்காவது வார தடுப்பூசி மெகா முகாமில் இன்று 2550 அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தங்களது பணியை சிறப்பாக ஆற்றியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விவரத்தை காணலாம் - மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 6,08,751 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 1,40,643 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுவரை முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி என மொத்தமாக 7,49,394 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.
எனினும் மீதம் உள்ள நபர்களுக்கு நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கரூர் நகரத்தில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்குதடையின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.