குளிர்காலத்தில் காலையில் 2 பூண்டுகள் சாப்பிட்டு பாருங்க.. இந்த பிரச்னையே வராது!
காலம் அறிந்து சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது கோடைகாலம், குளிர் காலம், மழைக்காலம் போன்ற நேரங்களில் நம் உடலுக்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விதவிதமான உணவுப் பழக்கம் என்பது நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது. நம்முடைய பாரம்பரிய உணவுகள் தொடங்கி மேலைநாட்டு உணவுகள் வரை நாம் முயற்சித்து வருகிறோம்.
அப்படி இருக்கும்போது காலம் அறிந்து சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது கோடைகாலம், குளிர் காலம், மழைக்காலம் போன்ற நேரங்களில் நம் உடலுக்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய மாற்றம் மிகவும் அவசியமானது. குறிப்பாக குளிர்குளிர்காலம் வரும்போது, உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வது முக்கியம். ஏனெனில் இந்த பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அப்படியான சமயத்தில் இதே சமையலறையில் கிடைக்கும் சில பொருட்களை நிச்சயமாக உணவில் சேர்த்தால் உடலை சூடாக வைத்திருக்க முடியும். மேலும் பல நோய்களிலிருந்து நாம் தற்காத்து கொள்ளவும் முடியும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
பூண்டு நம்முடைய உணவில் சேர்க்கப்படும் ஆரோக்கியம் நிறைந்த பொருளாகும். ஆயுர்வேதத்தில் இது முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அத்தகைய பூண்டு குளிர்காலத்தில் மனித உடலுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இதனை முறையாக எடுத்துக் கொண்டால் அது இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். மேலும் இரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை குறைக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகளின் அபாயத்தைக் குறைக்கும். குளிர்காலத்தில் அதிகமான மூட்டு வலி ஏற்படும். தசைபிடிப்பு அதிகமாகும். இவற்றுக்கெல்லாம் பூண்டை உட்கொள்வது சரியான தீர்வளிக்கிறது.
குளிர்காலத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்ற பருவகால நோய்கள் உடனடியாக தொற்றுக்கு ஆளாகும். அந்த நேரத்தில் பூண்டு உட்கொள்வது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சீரான இரத்த ஓட்டம் நடைபெற வழிவகை செய்கிறது. மூட்டு வலி வீக்கம் இருந்தால் சுமார் 50 கிராம் பூண்டை நன்றாக நறுக்கவும். அதில் கடுகு, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து வறுக்கவும். பூண்டு கருப்பாக மாறியதும், அந்த எண்ணெயை வடிகட்டி சேமிக்கவும். இந்த எண்ணெயை வலி உள்ள பகுதியில் மசாஜ் செய்வதால் குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கிறது. இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
அதேபோல் தினமும் காலை எழுந்ததும் 1 அல்லது 2 பூண்டு பற்களைப் பச்சையாக வெதுவெதுப்பான நீரில் போட்டு அருந்தலாம். அல்லது இரவு முழுவதும் ஊற வைத்து முதலில் தண்ணீரை குடித்து மென்று சாப்பிடவும். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
(இந்த செய்தியில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும். இதற்கு ஏபிபி நாடு எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















