மேலும் அறிய

Breast Health | பெண்களின் மார்பகம் வலிக்க 7 காரணங்கள் இருக்கு.. இந்த அறிகுறிகள் இருந்தா உடனே டாக்டரை பாருங்க..

இது மருத்துவ ஆலோசனை தரும் கட்டுரை அல்ல. எந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும் எனக்கூறும் ஒரு எச்சரிக்கை குறிப்பு மட்டுமே..

பெண்களின் மார்பகங்கள் 8 காரணங்களுக்காக வலியை உணரலாம். ஆனால் எது அபாய அறிகுறி, எதை உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதில் நமக்கு குழப்பம் இருக்கலாம். அதற்கான ஒரு குறிப்பே இந்த ஆலோசனைகள்..

1. உங்களுக்கு மாதவிடாய் நெருங்கும்போது வலி ஏற்படலாம்

மாதவிடாய் காலம் நெருங்கும்போது மார்பகப் பகுதியில் வலி ஏற்படுவது இயல்பானதே. ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் மார்பகங்கள் விரிவடைவதால் இந்த வலி ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மாதவிடாய் காலம் முடிந்ததும் இந்த வலி மறைகிறதா எனப் பாருங்கள். தொடர்ச்சியாக வலி இருப்பில் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

2. சரியான உள்ளாடையை அணிந்திருக்கிறீர்களா?

நம்மில் பலரும் செய்யும் மிக முக்கியமான தவறு எது தெரியுமா? சரியான அளவில் உள்ளாடையை அணியாமல் இருப்பது. இது நமது உடலமைப்பை கெடுப்பதுடன், உடலுக்கு அசெளகரியத்தையும் தரக்கூடியதாகும். மட்டுமின்றி, நமக்கு அதிகமான உடல் ரீதியான உபாதைகளை தரக்கூடியது. சரியான அளவில் உங்கள் மார்பகங்களை தாங்கும் உள்ளாடையை அணிவது, தடிப்புகள் முதல் பிற உடல்நலப்பிரச்சனைகள் வரை வராமல் தடுக்கும்.

3. மார்பகங்களில் சிறு கட்டிகள்

பெரும்பாலும் நகரக்கூடிய மிகச்சிறு கட்டிகள் ஆபத்தில்லாதவையாகவே இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், சிறு கட்டிகளோ, அல்லது நீர் அல்லது திரவம் போன்ற வெளியேற்றம் இருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். பதற்றமடையாதீர்கள்.

4. மார்பகக் காயங்கள்

அதிர்வான வேலைகளாலோ, மோதல்களாலோ காயங்கள் ஏற்படலாம். சில சமயம் அது வெளியில் தெரியலாம். உட்காயமாகவும் வலிக்கலாம். மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

5. பாலூட்டும் பெண்களுக்கு வரும் தொற்று

Milk Duct Infection பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படலாம். சிகப்பாக இருப்பினும், அல்லது காம்புகள் காயமாக இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்

6. கேன்சர் அறிகுறிகள்

மார்பகப் புற்றுநோயில் எல்லா நேரங்களிலும் அறிகுறிகள் வெளிப்படையானதாக இருப்பதில்லை. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம். சிறு கட்டிகள், அல்லது உருண்டைபோன்றவை தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். பதற்றப்படாமல் இவற்றை கையாளுங்கள்.

7. மருந்துகளை உட்கொள்கிறீர்களா?

ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளை உட்கொள்கிறீர்களா? ஸ்டீராய்டுகளை உட்கொள்கிறீர்களா? கர்ப்பத் தடுப்பு மாத்திரைகள், மனநலத்துக்கான மாத்திரைகள் அல்லது குழந்தையின்மைக்கான சிகிச்சையில் மருந்துகளை உட்கொள்கிறீர்களா? இதுவும் ஒரு குறிப்பிட்ட அளவில் மார்பக வலியைத் தரக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மார்பக சுயபரிசோதனை அவசியம். வாரம் ஒருமுறை கண்ணாடி முன் நின்று அதை நாமே செய்துகொள்ள முடியும். 30 வயதைத் தொட்ட பெண்கள் பரிசோதனையை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். பெண்களுக்கு உடல்நலனே பிரதானம். அதில் கவனம் செலுத்துவோம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்:
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
சிறுநீர் கழிப்பதில் சிரமம்.. ஏசியில் வேலை செய்தால் இப்படி ஒரு பிரச்னையா? - தீர்வு இதோ!
சிறுநீர் கழிப்பதில் சிரமம்.. ஏசியில் வேலை செய்தால் இப்படி ஒரு பிரச்னையா? - தீர்வு இதோ!
தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget