மேலும் அறிய

Fact Check: ஹரியானாவில் கையில் துப்பாக்கியோடு வலம் வந்த இளைஞர்? தமிழ்நாட்டிற்கு என்ன தொடர்பு..!

Fact Check: ஹரியானாவின் குர்கான் மாவட்டத்தில் ஒருநபர் கையில் துப்பாக்கியோடு சுற்றி திரிந்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Fact Check: ஹரியானாவின் குர்கான் மாவட்டத்தில் ஒருநபர் கையில் துப்பாக்கியோடு சுற்றி திரிந்ததாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

வீடியோ வைரல்:

தமிழ்நாட்டில் தேசிய பாதுகாப்புப் படை (NSG) நடத்திய  பயிற்சியின் காணொலி, ஹரியானாவின் குர்கானில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று ஒரு பிக்கப் டிரக்கில் வெளிப்படையாக சுற்றித் திரிவதைக் காட்டுகிறது.  X பயனர் ஒருவர் இந்தி தலைப்புடன் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதனை மொழிபெயர்க்கும்போது, "இந்த வைரல் வீடியோ ஹரியானாவின் குர்கானில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது, அங்கு நான்கு துப்பாக்கிதாரிகள் முகத்தை துணியால் மூடியபடி ஒரு காரில் வெளிப்படையாக சுற்றித் திரிகிறார்கள்!" என கூறப்பட்டுள்ளது.

Fact Check: ஹரியானாவில் கையில் துப்பாக்கியோடு வலம் வந்த இளைஞர்? தமிழ்நாட்டிற்கு என்ன தொடர்பு..!

வைரலாகும் பதிவு - 1

அதே மாதிரி பயிற்சியின்போது எடுக்கப்பட்ட மற்றொரு காணொலியை X தளத்தில் பகிர்ந்த ஒருவர், தமிழ்நாட்டின் வேலூர் விஐடி-யில் என்ன நடக்கிறது? அவர்கள் கைகளில் துப்பாக்கிகளை வைத்துள்ளாரகள். அது பயில்வதற்கும், வளர்வதற்குமான இடம்” என குறிப்பிட்டுள்ளார்.

Fact Check: ஹரியானாவில் கையில் துப்பாக்கியோடு வலம் வந்த இளைஞர்? தமிழ்நாட்டிற்கு என்ன தொடர்பு..!

வைரலாகும் பதிவு - 2

உண்மை என்ன?

மார்ச் 2, 2025 அன்று தமிழ்நாட்டின் வேலூர் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் தேசிய பாதுகாப்புக் காவலர்கள் நடத்திய ஒரு பயிற்சியிலிருந்து இந்த வைரல் காணொலிகள் வெட்டி எடுக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. 

முதல் வீடியோ:

முதலில் 'NSG mock drill' என்ற முக்கிய வார்த்தையைத் தேடியபோது, ​​மார்ச் 2, 2025 அன்று தி இந்து வெளியிட்ட ஒரு அறிக்கையைக் கண்டறிந்தோம் . அதில், NSG அதிகாரிகள் அன்றைய தினம் VIT வளாகத்தில் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கான பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளைப் பயிற்சி செய்வதற்காக மாதிரி பயிற்சிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வைரலான காணொலிகளில் ஒன்றுடன் பொருந்தக்கூடிய ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும் வேலூர் எஸ்பி என். மதிவாணன் இந்தப் பயிற்சிக்காக என்எஸ்ஜி மற்றும் மாவட்ட காவல்துறையுடன் ஒருங்கிணைந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

"பயிற்சியின் ஒரு பகுதியாக, நகரின் கோட்டை வளாகத்திற்கு அருகிலுள்ள ஆயுதப்படை (AR) அணிவகுப்பு மைதானத்தில், தமிழ்நாடு சிறப்புப் படையின் ஒரு பெரிய குழு நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், மாதிரிப் பயிற்சி தொடங்கப்பட்டது. பயங்கரவாதத் தாக்குதல் குறித்து குழுவுக்கு எச்சரிக்கை கிடைத்ததும், கமாண்டோக்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு விரைந்தனர். பின்னர், சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த ஒரு NSG குழுவும் அவர்களுடன் சேர்ந்து மாவட்ட எல்லையில் உள்ள உள்ளூர் போலீசாரால் வழிநடத்தப்பட்டு பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்றது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Fact Check: ஹரியானாவில் கையில் துப்பாக்கியோடு வலம் வந்த இளைஞர்? தமிழ்நாட்டிற்கு என்ன தொடர்பு..!

மேலும், இந்தப் பயிற்சி முழுவதுமாக பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டது என்றும், பல்கலைக்கழகம் அதன் வளாகத்தை மட்டுமே வழங்கியது என்றும் விஐடி அதிகாரிகள் தெளிவுபடுத்தியதாக அது மேலும் கூறியது. போலிப் பயிற்சியின் வீடியோக்கள் வைரலானதை அடுத்து, பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று மாவட்ட காவல்துறையும் வலியுறுத்தியது.

இரண்டாவது வீடியோ:

25 வினாடிகள் கொண்ட வீடியோவின் இறுதியில், நான்கு துப்பாக்கி ஏந்தியவர்களை ஏற்றிச் செல்லும் பிக்அப் டிரக், விஐடி வளாகத்தின் நுழைவாயில் தெளிவாகத் தெரியும் ஒரு இடத்திற்கு அருகில் நிற்கிறது. வாகனத்தின் எண் பலகையில் "HR" என்ற முதலெழுத்துக்களும் அதன் உடலில் 'இந்திய அரசு' என்ற லேபிளும் இடம்பெற்றுள்ளன.

Fact Check: ஹரியானாவில் கையில் துப்பாக்கியோடு வலம் வந்த இளைஞர்? தமிழ்நாட்டிற்கு என்ன தொடர்பு..!

அதனடிப்படையில் வேலூர் எஸ்பி என். மதிவாணனைத் தொடர்பு கொண்டபோது, அவர் அந்த வீடியோ மார்ச் 2, 2025 அன்று காலை 11:30 மணி முதல் மாலை 6:40 மணி வரை நடத்தப்பட்ட NSG மாதிரிப் பயிற்சியின் வீடியோ என்பதை உறுதிப்படுத்தினார். சம்பவம் குறித்த விரிவான செய்திக்குறிப்பையும் அவர் வழங்கினார்.

அதில், "104 NSG கமாண்டோக்களை மேற்பார்வையிட்ட கமாண்டன்ட் திரு. சந்தீப் குமார் தலைமையில் இந்த பயிற்சி நடைபெற்றது. மேலும், 57 தமிழ்நாடு கமாண்டோக்களை வழிநடத்திய காவல் கண்காணிப்பாளர் (SP) திரு. அருண் பாலகோபாலன் (IPS) தலைமையில் இந்த பயிற்சி நடைபெற்றது. கூடுதலாக, காட்பாடி துணைப்பிரிவு உதவி எஸ்பி திரு. பழனி, காட்பாடி துணைப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காட்பாடி வருவாய் அதிகாரி திரு. ஜெகதீசன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பயிற்சியின் ஒருங்கிணைப்பை மாவட்ட குற்றப்பிரிவு உதவி எஸ்பி திரு. திருநாவுக்கரசு மேற்பார்வையிட்டார்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுரை:

மேற்குறிப்பிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஹரியானாவின் குர்கான் மாவட்டத்தில் ஒருவர் கையில் துப்பாக்கியோடு சுற்றி திரிந்ததாக பரவும் வீடியோ, உண்மையில் தமிழ்நாட்டில் NSG கமாண்டோக்களின் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.

ALSO READ: Tamil Nadu NSG Mock Drill Peddled As Video Of Gunmen Spotted In Haryana

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Embed widget