Fact Check: வீட்டு வாசலில் கர்ஜித்த புலி, கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி - இணையத்தில் பரவும் வீடியோ
Fact Check: ஒரு பெண் கதவை திறந்ததும் வீட்டு வாசலில் புலி நின்று இருந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Fact Check: ஒரு பெண் கதவை திறந்ததும் வீட்டு வாசலில் புலி நின்று இருந்தது தொடர்பான வீடியோ, இந்தியாவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையா என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வைரலாகும் வீடியோ:
ஒரு நபர் சாவியைக் கொண்டு கதவைத் திறக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், கதவை திறந்ததும் அதன் மெல்லிய இடைவெளியில், ஒரு புலியின் இரண்டு ஒளிரும் கண்கள் தெரிகின்றன. அந்த நபர் அதிர்ச்சியில் கதவை விரைவாக மூடுகிறார். இந்தியாவில் ஒரு பெண் தனது வீட்டிற்கு வெளியே ஒரு புலியைக் கண்டதாக கூறும் அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இந்த தொகுப்பில் ஆராயலாம்.
வைரலாகும் பதிவு
வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?
வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, நாங்கள் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடலை மேற்கொண்டோம். அதன்மூலம், பிரபல அமெரிக்க பாடகரும் நடனக் கலைஞருமான ஜேசன் டெருலோவின் யூடியூப் சேனலில் அதே வீடியோவைப் பார்க்க முடிந்தது. அந்த வீடியோ பிப்ரவரி 22, 2025 அன்று " புலி! #GotPermissionToPost From @Yara_Goryanskiy #SlowLow " என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
View this post on Instagram
வீடியோ எங்கு எடுக்கப்பட்டது?
யூடியூப் வீடியோவின் தலைப்பில் குறிப்பிட்டு இருந்ததன் அடிப்படையில், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்கும் புலிகள், காட்டுப் பூனைகள், கரடிகள் மற்றும் ஓநாய்கள் உள்ளிட்ட பல காட்டு விலங்குகளை வைத்திருக்கும் யாரா கோரியன்ஸ்கி என்ற நபர் குறித்து தேடினோம். அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சமூக வலைதள பக்கங்களை கண்டறிந்தோம். அதன்படி, அவரது யூடியூப் சேனலில், அவர் அதே வீடியோவை பிப்ரவரி 08, 2025 அன்று பதிவேற்றி இருந்தார். ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட தலைப்பில், " நீங்கள் தவறான வாசலில் நுழையும்போது " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் அதே வீடியோவை ஜனவரி 30, 2025 அன்று பதிவேற்றியுள்ளார். இது 94 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. முன்னதாக, அவர் ஜனவரி 2024 இல் ஒரு சிங்கக் குட்டியுடன் விளையாடிய வீடியோவும் வைரலானது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் காட்டு விலங்குகளைக் கொண்ட இதே போன்ற வீடியோக்களால் நிரம்பியுள்ளது.
வீடியோவை வெளியிட்டவரின் இன்ஸ்டாகிராம் கணக்கு
முடிவுரை
இந்தியாவில் ஒரு பெண் தனது வீட்டிற்கு வெளியே புலியைக் கண்டுபிடித்ததாகக் கூறுவது தவறானது. உண்மையில் இந்த காணொலி ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ஆண் வெளியிட்டதாகும்.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Factly என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

