மேலும் அறிய

Fact Check : மின்சார கட்டணத்தை உயர்த்துகிறதா திமுக அரசு? பரப்பப்படும் செய்தி உண்மையா?

மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தவிருப்பதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இந்த செய்தி உண்மையானதா என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

“திமுகவின் அடுத்த விடியல், மின்சார கட்டணம் உயர்வு” என்று குறிப்பிட்டு மின்சார கட்டண உயர்வு பட்டியல் ஒன்று அதிமுக ஆதரவாளர்கள் சிலரால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

பரப்பப்படும் தகவல் உண்மையானதா?

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check : மின்சார கட்டணத்தை உயர்த்துகிறதா திமுக அரசு? பரப்பப்படும் செய்தி உண்மையா?

மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தவிருப்பதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து ஊடகங்களில் செய்தி ஏதும் வந்துள்ளதா என்று தேடினோம். இத்தேடலில் இவ்வாறு எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் பட்டியலை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். இத்தேடலில் பாலிமர் நியூஸின் எக்ஸ் பக்கத்தில் ‘தமிழகம் முழுவதும் மின்சார கட்டண உயர்வு விவரம்’ என்று தலைப்பிட்டு இதே பட்டியல் செப்டம்பர் 10, 2022 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் செப்டம்பர் 10, 2022 அன்று புதிய தலைமுறை வெளியிட்டிருந்த செய்தியிலும் வைரலாகும் பட்டியலில் குறிப்பிட்டிருந்த அதே கட்டண உயர்வு தகவல் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் கட்டண உயர்வு பட்டியல் 2022 ஆண்டின் பழைய கட்டண உயர்வு பட்டியல் என அறிய முடிகின்றது.

Fact Check : மின்சார கட்டணத்தை உயர்த்துகிறதா திமுக அரசு? பரப்பப்படும் செய்தி உண்மையா?

இதனையடுத்து தேடுகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் கட்டண உயர்வு பட்டியல் பழைய பட்டியல் என தெளிவு செய்து பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் 2022 ஆம் ஆண்டின் பழைய செய்தியை தற்போது நடந்ததாக திரித்து பொய்யான தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது உறுதியாகின்றது.

மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தவிருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும். 2022 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின் உயர்வு கட்டண பட்டியலை வைத்து இத்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே, வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக NewsChecker.in என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?

"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?

EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்

ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை

Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்

INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?

Embed widget