மேலும் அறிய

தெருநாய்கள் பிரச்னை: பாடம் எடுத்த பரிதாபங்கள் கோபி & சுதாகர்.. நாய் ஆதரவாளர்களுக்கு சவுக்கடி!

தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக பரிதாபங்கள் சுதாகர், கோபி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தெருநாய் விவகாரம் ஒரு சமூக பிரச்னையாக உருவெடுத்திருப்பதால் தெரு நாய் ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினரும் தங்களது கருத்துகளை முன்வைத்து விவாதம் செய்து வருகின்றனர். அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதமும் சர்ச்சையாக மாறியது. தெருநாய்கள் பாவம் அது குழந்தைங்க அது என்ன செய்கிறது என்ற தொணியில் சீரியல் நடிகைகள் பேசியதை கண்டித்து நெட்டிசன்களும் அவர்களை ட்ரோல் செய்து வருகின்றனர். 

தெருநாய் பாவங்கள்

இந்நிலையில், தெருநாய்களை ஆதரிப்பவர்களையும், DOG Lovers என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் டீம் வெளியிட்டுள்ள வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் தங்களது பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பல சமூக கருத்துகள் நிறைந்த வீடியோக்களில் காமெடியாக கலாய்த்து பேசி மக்களுக்கு புரிய வைத்து வருகிறார்கள். அண்மையில், கவின் ஆணவக்கொலையை கண்டித்தும் ஆணவக்கொலையை ஆதரிப்பவர்களுக்கு எதிரான தங்களது கருத்தை பதிவு செய்திருந்தனர். அதேபோன்று தெருநாய் பாவங்கள் வீடியோவும் கவனத்தை பெற்றுள்ளது. 

தெருநாய்களுக்கு ஆதரவாக போராட்டம் ஏன்?

தெருநாய்களை விளம்பரத்திற்காக ஆதரிப்பவர்களை கோபி சுதாகர் டீம் வெளுத்து வாங்கியுள்ளனர். சும்மா போகிற போக்கில் தெருநாய்களுக்கு ஆதரவாக சப்பைக்கட்டு கட்டக்கூடாது. அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிர்ப்பு குரல் மட்டுமே வருகிறது. போராட்டம் செய்வது முறையல்ல, நாய்க்கடியால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. நாய்க்கடியால் கர்ப்பிணி பெண் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் நிம்மதியாக இருசக்கர வாகனத்தில் செல்ல முடிகிறதா? மக்களை அச்சுறுத்தும் அளவிற்கு தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டது. 

சென்னையில் 1.70 லட்சம் தெருநாய்கள்

சென்னையில் மட்டும் 1.70 லட்சம் தெருநாய்கள் இருக்கிறது என புள்ளி விவரத்தோடு சொல்கிறார்கள். போராட்டம் செய்யும் அனைவரும் வீட்டில் 1,000 நாய்களை எடுத்து சென்று வளர்த்தால் நன்றாக இருக்கும் என பல கேள்விகளை சுதாகர், கோபியும் எழுப்பியுள்ளனர். அதனோடு, தெருநாய்களை குழந்தைங்க என்று காமெடி பண்ணாதீங்க. எதற்கெடுத்தாலும் அரசை கேள்வி கேட்கும் நீங்க, தெருநாயை கட்டுப்படுத்த சரியான முடிவை சொல்லுங்க அதுவும் தெரியலைனா வாயை மூடிக்கொண்டு இருக்கவும் என்பது போல் தெருநாய் பாவங்கள் வீடியோவில் தெரிவித்துள்ளனர். இங்கு அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர, ஏழை எளிய மக்கள் தான். பணக்காரர்கள் இல்லை, பணக்காரர் வீட்டு பிள்ளையை தெருநாய் கடித்து காயமடைந்த செய்தி வந்திருக்கிறதா என பல கேள்விகளால் நாய் ஆதரவாளர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளனர். நாய்க்கு உணவு வைப்பது வன்முறை இது தெரியாமல் பாவம் என்று பார்த்து வைப்பதால் பல நோய் ஏற்படுகிறது எனவும் பேசியுள்ளனர். இதைப் பார்த்த பார்வையாளர்கள் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  

தலைப்பு செய்திகள்

Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
Toxic Collection: படுமோசம் என விமர்சனம்.. கல்லா கட்டிய டாக்ஸிக்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
Ilayarajaa: சத்யராஜ் படத்தின் அந்த காட்சிக்கு மட்டும் இசையமைக்க மறுத்த இளையராஜா - எந்த படம்? என்ன சீன்?
Ilayarajaa: சத்யராஜ் படத்தின் அந்த காட்சிக்கு மட்டும் இசையமைக்க மறுத்த இளையராஜா - எந்த படம்? என்ன சீன்?
Arasan: அசுர வேகத்தில் அரசன்.. ஷுட்டிங்கிலே ஸ்கெட்ச் போடும் அனிருத், வெற்றிமாறன், சிம்பு!
Arasan: அசுர வேகத்தில் அரசன்.. ஷுட்டிங்கிலே ஸ்கெட்ச் போடும் அனிருத், வெற்றிமாறன், சிம்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
Tambaram to Chengalpattu : டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! -தவெக அரசின் மாஸ் பிளான்
டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! - தவெக அரசின் மாஸ் பிளான்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!
பயிற்சி மருத்துவர்கள் அவலம்: ஊதியம் உயர்த்துக, 8 மணி நேர வேலை- CPI கோரிக்கை!
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
3 Consecutive Days Holidays : செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
Embed widget