Karthigai Deepam: சொந்தம் கொண்டாட்றீங்களா? பரமேஸ்வரியிடம் கோபப்பட்டு கத்திய சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் இளையராஜாவை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பரமேஸ்வரியிடம் கோபப்பட்ட சாமுண்டீஸ்வரி:
அதாவது, பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரிக்கு ஒரு நகையை கொடுத்து அனுப்ப அதை சாமுண்டீஸ்வரி வாங்க மறுக்கிறாள். இது எல்லாம் பண்ண அவங்க யாரு? இப்படியே கொஞ்சம் கொஞ்சமா உறவு கொண்டாடிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்துடலாம்னு பாக்குறாங்களா? என்று கோபப்பட்டு நேராக பரமேஸ்வரியை சென்று சந்திக்கிறாள்.
இதையெல்லாம் கொடுத்து எங்க குடும்பத்துக்குள்ள வரலாம்னு நினைக்காதீங்க? என்று கோபப்படுகிறாள். ரேவதி பாட்டி எவ்வளவு ஆசையை கொடுத்தாங்க அம்மா ஏன் இப்படி நடந்துக்கிறாங்க என்று வருத்தப்பட கார்த்திக் அவங்கள பத்தி தெரியாதா விடு என்று சமாதானம் செய்கிறான்.
என்ன நடக்கப்போகிறது?
அடுத்து கோவில் திருவிழாவில் இந்த முறை கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கணும், நடக்கும் என இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பேசுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















