மேலும் அறிய

அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?

நடிகர் தனுஷ் ராதன் பண்டித்தை சந்தித்ததாக வெளியான தகவல் பரபரப்பு; அரசியல் பயணத்திற்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜயைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றொரு தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில்  முதலமைச்சர் விஜயின் வெற்றியை முன்பே கணித்த பிரபல ஜோதிடரான ராதன் பண்டித்தை தனுஷ் சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் புதிய தகவலை தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். 

ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?

வலைப்பேச்சு அந்தணன் கூறிய தகவலின்படி, தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சராக வருவதற்கான யோகம் தனுஷின் ஜாதகத்தில் உள்ளதா என்பதை அறியவே ராதம் பண்டித்தை அவர் அணுகியிருப்பதாக கூறியுள்ளார். மேலும், தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வரவிருக்கும் தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாகவும், அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியாக ஆதரவு வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையில், நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனுஷ் ஆற்றிய பேச்சும் இந்த தகவலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ஜூலை 28 ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் தனது ரசிகர்களை நேற்று ஜூலை 26 அன்று சந்தித்து நலத்திட்ட உதவிகளை செய்துவைத்தார். தனது ரசிகர்களை நோக்கி பேசிய தனுஷ், "நாம் நல்லவர்களாக இருந்தால் போதாது. நமக்கு பின்னால் வருபவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள்" என்ற கருத்தை வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சு, ரசிகர் மன்றங்களை சமூக மற்றும் பொதுப்பணிகளில் தீவிரமாக ஈடுபடச் செய்யும் அரசியல் முன்னோட்டமாகவே பலரால் பார்க்கப்பட்டது.

ஏற்கனவே நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், தனுஷின் சமீபத்திய பேச்சும், தற்போது வெளியாகியுள்ள ஜோதிடர் சந்திப்பு குறித்த தகவலும் இணைந்து பார்க்கப்படுகின்றன. இதனால், தனுஷும் அரசியல் பயணத்துக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாரா என்ற விவாதம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது.

தற்போதைக்கு தனுஷ் தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை என்றாலும், ராதம் பண்டித் சந்திப்பு குறித்த தகவலும், ரசிகர் மன்றங்களை தேர்தல் களத்தில் இறக்கும் திட்டம் குறித்த தகவலும், தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget