மேலும் அறிய

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு இதயம் கிடைக்குமா? மாமியாரைக் காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் விறுவிறுப்பு

கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகிய நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’.  இந்த சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 

சாமுண்டீஸ்வரிக்காக கண்ணீர் விட்ட பரமேஸ்வரி:

ஜெயிலில் இருந்து வெளியே வரும் பாட்டி, நேராக மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கே ஐசியூ-வில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரியைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுகிறார். அறுவை சிகிச்சை முடிந்துவிட்டாலும், சாமுண்டீஸ்வரியின் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதால், உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் கிடைத்தால் மட்டுமே சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்ற முடியும் என்ற தகவல் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இதற்கிடையில், கல்யாணக் கோலத்தில் மருத்துவமனைக்கு வரும் ஸ்வாதி, இந்த நேரத்தில் இப்படியொரு பிரச்சினை வந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறார். அப்போது அங்கிருக்கும் நர்ஸ், அனைவரையும் வெளியே செல்லும்படி கூறுகிறார்.

சந்திரகலாவின் கொடூர எண்ணம்:

மறுபக்கம், சந்திரா மஹாலில் இருக்கும் சந்திரகலாவிடம், மருத்துவமனை நர்ஸ் சாமுண்டீஸ்வரியின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகச் சொல்கிறார். இதைக் கேட்டதும் சந்திரகலா நேராகக் காவல் நிலையத்துக்குச் சென்று சிவனாண்டியைச் சந்திக்கிறார்.

அப்போது, “சாமுண்டீஸ்வரிக்கு இதயம் கிடைக்காது. அவள் சாகத்தான் போகிறாள். அவளுடைய இடத்தில் உன்னை உட்கார வைக்கிறேன்” என்று தன்னுடைய கொடூரமான திட்டத்தைப் பகிர்ந்துகொள்கிறார். சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்திலும், சந்திரகலா தனது பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுவதாக இல்லை.

அத்தையைக் காப்பாற்றப் போராடும் கார்த்திக்:

இதற்கிடையில், மருத்துவர் செழியனைச் சந்திக்கும் கார்த்திக் மற்றும் இளையராஜா, சாமுண்டீஸ்வரியின் நிலைமையைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்கிறார்கள். உடனே அவருக்கு இதயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள்.

கார்த்திக் தனது அண்ணன் அருணுக்குப் போன் செய்து நடந்த விஷயங்களைச் சொல்கிறார். அப்போது அருண், “உன்னை இவ்வளவு கொடுமைப்படுத்திய பிறகும், நீ அவர்களுக்காக இவ்வளவு தூரம் நிற்கிறாயே!” என்று நெகிழ்ந்து பேசுகிறார்.

ஆனால், கார்த்திக்கோ, “இப்போ இதையெல்லாம் பேசுறதுக்கு நேரமில்லை. அத்தையைக் காப்பாத்தணும்” என்று சொல்லிவிட்டு, அருண் மற்றும் இளையராஜாவுடன் சேர்ந்து இதயத்தைத் தேடும் முயற்சியில் இறங்குகிறார்.

சாமுண்டீஸ்வரிக்காக பிரார்த்தனை:

மருத்துவமனையில் சாமுண்டீஸ்வரியின் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்க, மறுபக்கம் பாட்டி, ரோகிணி, ரேவதி மற்றும் ஸ்வாதி ஆகியோர் கோயிலுக்குச் செல்கிறார்கள். அங்கே சாமுண்டீஸ்வரி மீண்டும் நலமாக வேண்டும், அவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று மனமுருகி வேண்டிக்கொள்கிறார்கள்.

இப்படியொரு இக்கட்டான சூழலில், சந்திரகலா தனது அடுத்த சதியை அரங்கேற்றுகிறார். நர்ஸின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் ஐசியூ-வுக்குள் நுழைகிறார். அங்கே நினைவில்லாமல் படுத்திருக்கும் சாமுண்டீஸ்வரியைப் பார்த்து, “உன்னோட வாழ்க்கை இத்தோட முடிஞ்சது. இனிமேல் உன்னோட சொத்து, உன்னோட ஸ்தானம் எல்லாமே எனக்குத்தான்!” என்று வன்மத்துடன் பேசுகிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது?

சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்றுவதற்காக கார்த்திக் சரியான நேரத்தில் இதயத்தைக் கண்டுபிடிப்பாரா? சந்திரகலாவின் சதித் திட்டத்தை முறியடிப்பாரா? உயிருக்குப் போராடும் சாமுண்டீஸ்வரி மீண்டும் கண் விழிப்பாரா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்மாண்டத்திற்கு முக்கியத்துவம்...சொதப்பலான இசை..ராமாயணா படத்தின் முதல் விமர்சனம்
பிரம்மாண்டத்திற்கு முக்கியத்துவம்...சொதப்பலான இசை..ராமாயணா படத்தின் முதல் விமர்சனம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
Embed widget