மேலும் அறிய

Karthigai Deepam: முடிவை மாற்றிய சாமுண்டீஸ்வரி..! சந்திரகலாவை ஏமாற்றிய கார்த்திக் ப்ளான்! கார்த்திகை தீபத்தில் இன்று

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில், அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

முகமூடி நாடகம்:

கார்த்திக் போடும் திட்டம் ஒருபக்கம், சாமுண்டீஸ்வரியின் திடீர் முடிவு மறுபக்கம் என திருமண மண்டபமே பரபரப்பாக இருக்கிறது. இதற்கிடையில், சதீஷின் முகமூடி நாடகத்தை அம்பலப்படுத்தும் முயற்சியும் தீவிரமடைந்துள்ளது.

திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது?

திருமண மண்டபத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அப்போது சதீஷுக்குக் கொடுப்பதற்காக சாமுண்டீஸ்வரி புது ஆடைகளை எடுத்து வைக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர், “இந்தத் துணியை நானே சதீஷ்கிட்ட கொடுத்துட்டு வரேன்” என்று சொல்லி வாங்கிச் செல்கிறார்.

சிறிது நேரம் கழித்து சாமுண்டீஸ்வரியைச் சந்திக்கும் அவர், சதீஷ் தயாராகிவிடுவான் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். ஆனால், இந்த ஏற்பாடுகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் அனைவரும் இருக்கிறார்கள்.

கார்த்திக் திட்டத்தால் ஏமாந்த சந்திரகலா:

மறுபக்கம், குடோனில் கார்த்திக்கும் மயில்வாகனமும் தங்களுடைய திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகிறார்கள். கார்த்திக் தன்னை யாரோ கட்டிப்போட்டு வைத்திருப்பது போல் ஒரு போலிப் புகைப்படத்தை எடுத்து, அதைச் சந்திரகலாவுக்கு அனுப்பச் சொல்கிறார்.

அந்தப் புகைப்படத்தைப் பார்த்த சந்திரகலா, கார்த்திக் உண்மையிலேயே சிக்கிக்கொண்டுவிட்டான் என்று நினைத்து சந்தோஷப்படுகிறார். இதுதான் சரியான நேரம் என்று நினைத்து, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று திட்டமிடத் தொடங்குகிறார்.

திடீரென முடிவை மாற்றிய சாமுண்டீஸ்வரி:

சந்தோஷத்துடன் சாமுண்டீஸ்வரியைச் சந்திக்கும் சந்திரகலா, “கார்த்திக் மாட்டிக்கிட்டான். இப்போ ரேவதியை மணமேடையில் உட்கார வச்சிடலாமா?” என்று கேட்கிறார். ஆனால் சாமுண்டீஸ்வரியோ, “வேண்டாம், நம்ம திட்டப்படி சதீஷுக்குச் சுவாதியைத் திருமணம் செய்து வைப்பதுதான் சரியாக இருக்கும்” என்று திடீரென முடிவை மாற்றிப் பேசுகிறார்.

இதைக் கேட்ட சந்திரகலாவுக்கு ஒரே குழப்பம். இதுவரை ஒரு முடிவில் இருந்த அக்கா, இப்போது ஏன் இப்படிப் பேசுகிறார்? என்று புரியாமல் தவிக்கிறார்.

சந்திரகலாவுக்கு சந்தேகம்:

இதற்கிடையில் மகேஷ்வரியும் மாயாவும் பேசிக்கொள்வது சந்திரகலாவின் காதில் விழுகிறது. “சுவாதியைத் திருமணம் செய்தால் என்ன, ரேவதியைத் திருமணம் செய்தால் என்ன? நமக்குத் தேவை பணம் மட்டும்தான்” என்று அவர்கள் பேசுவதைக் கேட்டு சந்திரகலாவுக்குச் சந்தேகம் அதிகமாகிறது.

அதே சமயம், மண்டபத்தில் ஏதோ தவறு நடப்பதைச் சாமுண்டீஸ்வரியும் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறார்.

வசமாகச் சிக்கிய மேக்கப் மேன்:

ஒருபக்கம் கார்த்திக் தனது திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்க, மறுபக்கம் மயில்வாகனம் திரைப்பட இயக்குநர் போல வேடமிட்டு மேக்கப் மேன் தானாராவைச் சந்திக்கிறார்.

அவருடன் இளையராஜாவையும் அழைத்துச் சென்று, “ஹீரோவுக்கு டபுள் ஆக்ஷன். அதனால் இவருக்கு ஒரு மாஸ்க் தயார் செய்யணும்” என்று கூறி தானாராவிடம் பேச்சுக் கொடுக்கிறார்.

அப்போது சதீஷின் புகைப்படத்தைக் காட்டி, “இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கிறார்கள். புகைப்படத்தைப் பார்த்ததும் தானாராவுக்கு அதிர்ச்சி. ஏனென்றால், சதீஷைப் போலவே இருக்கும் முகமூடியைத் தயார் செய்து கொடுத்ததே அவர்தான்! ஆனாலும், உண்மையைச் சொல்லாமல் தப்பிக்க நினைக்கும் அவர், “எனக்கு இவரைத் தெரியாது” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சி செய்கிறார்.

மிரட்டல்:

ஆனால் கார்த்திக்கின் ஆட்கள் அவரை வழிமறித்துப் பிடிக்கிறார்கள். “மண்டபத்துக்கு வந்து எல்லார் முன்னாடியும் உண்மையைச் சொல்லணும். இல்லையென்றால் உன்னைச் சும்மா விடமாட்டோம்” என்று மிரட்டி அவரை அழைத்துச் செல்கிறார்கள். இதற்கிடையில், மண்டபத்தில் இருக்கும் ஓர் அறையில் உள்ள பெட்டியில் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பதைச் சந்திரகலா பார்க்கிறார். அந்தப் பணம் சிவனாண்டிக்குக் கொடுக்கப்பட்ட பணம் என்பதை உணர்ந்ததும் அவருக்குப் பெரிய அதிர்ச்சி.

“இந்தப் பணம் இங்கே எப்படி வந்தது? அப்படியென்றால் சாமுண்டீஸ்வரி சிவனாண்டியைச் சந்தித்திருக்கிறாரா?” என்று பல கேள்விகள் அவருக்குள் எழுகின்றன.
ஒருபக்கம் சதீஷின் முகமூடி ரகசியத்தை அம்பலப்படுத்த மேக்கப் மேன் மண்டபத்துக்கு அழைத்து வரப்படுகிறார். இன்னொரு பக்கம் பணப்பெட்டியைப் பார்த்த சந்திரகலாவுக்குப் புதிய சந்தேகம் எழுந்துள்ளது.

இப்படிப் பல ரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கும் நிலையில், திருமண மண்டபத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? சதீஷின் முகமூடி நாடகம் அனைவருக்கும் தெரியவருமா? சந்திரகலா கண்டுபிடித்த உண்மை சாமுண்டீஸ்வரிக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்துமா? என்பது குறித்து அறிய‘கார்த்திகை தீபம்’ சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
Anirudh:
Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
Udhayanidhi: SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
TN Govt: அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!
IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
Embed widget