Karthigai Deepam: ரவுடிகளை ரெடி பண்ணும் துர்கா.. அம்பலமாகுமா நவீனின் நாடகம்? கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் சந்திரகலாவின் திட்டத்தை கார்த்திக் முறியடித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரவடிகளை ரெடி பண்ணும் துர்கா:
அதாவது கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் மகேஷை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். டாக்டர் மல்லிகா இதே ஹாஸ்பிடல் ரவுண்ட்ஸ் வந்து இருக்க அவரைப் பார்ப்பதற்காக சாமுண்டீஸ்வரி வருகிறாள். மகேஷ் கார்த்திக் ரேவதியை சாமுண்டீஸ்வரி பார்த்து விடுவாளா? என்ற பில்டப் காட்சிகள் நகர கடைசியில் மிஸ் ஆகி விடுகிறது.
இதனைத் தொடர்ந்து துர்கா ரவுடிகளை ஏற்பாடு செய்து நவீனை அடிக்க பணம் கொடுக்கிறாள். ரவுடிகள் நவீனை அடிக்க பாக்க நவீன் என நீங்க அடிக்க வேண்டாம். துர்கா எவ்வளவு பணம் கொடுத்தாளோ அதே பணத்தை நான் தரேன் என்ன நல்லா அடிச்சதா மட்டும் சொல்லுங்க என்று சொல்லி ரவுடிகளை தன் பக்கம் இழுக்கிறான்.
அதன் பிறகு நவீன் ரவுடிகளால் அடிபட்டு ஹாஸ்பிடல் இருக்கும் விஷயம் தெரிந்து துர்கா அவனைப் பார்க்க வருகிறாள். கை, காலில் கட்டுக்களுடன் ஹாஸ்பிட்டலில் நவீன் படுத்திருக்க அவனைப் பார்த்ததும் துர்கா வருத்தம் அடைகிறாள். அவனிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.
அம்பலமாகுமா நவீனின் நாடகம்?
யமுனாவின் தோழி ரேவதிக்கு போன் போட்டு அவளை ஒரு நிகழ்ச்சியில் பாட வைக்க சொல்லி கேட்க கார்த்தி மற்றும் ரேவதி என இருவரும் யமுனாவை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கின்றனர்.
துர்கா வெளியில் வந்ததும் நவீன் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு மயில்வாகனத்துடன் போனில் பேசுகிறான். துர்கா தனது செல்போனை மறந்து வைத்து விட்டு வந்ததால் அதை எடுப்பதற்காக மீண்டும் உள்ளே வருகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















