மேலும் அறிய

Yuvan - Ameer: யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் கதாநாயகனாகும் அமீர்..! வெற்றிக்கூட்டணி மீண்டும் மெகா ஹிட் அடிக்குமா?

இயக்குனர் அமீர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் லீட் ரோலில் நடிக்கிறார் அமீர் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது

இளைஞர்களின் இதயத்துடிப்பிற்கேற்ற பாடல்களை துள்ளலாக கொடுத்து வருபவர் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா. 90களில் இசையமைப்பாளராக தொடங்கிய இவரது இசை பயணம் நாளுக்கு நாள் புதுப்பித்து கொண்டே  இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

யுவன் எனும் இசையரசன்:

கடந்த ஆண்டு மட்டும் அரை டஜன் படங்கள் இவரின் இசையமைப்பில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான இசை பிரியர்களை கொண்ட யுவன் ஷங்கர் ராஜா தற்போது கஸ்டடி, ஆண்டவர், இறைவன், ஏழு கடல் ஏழு மலை, இறைவன் மிகப்பெரியவன், மிஸ்டர் ஜூ கீப்பர், பொம்மை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மக்கள் மெய்மறக்க உள்ளனர். 

Yuvan - Ameer: யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் கதாநாயகனாகும் அமீர்..! வெற்றிக்கூட்டணி மீண்டும் மெகா ஹிட் அடிக்குமா?

YSR பிலிம்ஸ் தயாரிப்பு :

ஒரு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா எந்த அளவிற்கு வெற்றிபெற்றுள்ளாரோ அதே போல தனது YSR பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெற்றிகரமாக படங்களையும் தயாரித்து வருகிறார். அப்படி அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்’ மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'மாமனிதன்' திரைப்படம். 

மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி :

அந்த வகையில் மீண்டும் YSR பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா இயக்குனர் அமீரின் அமீர் பிலிம் கார்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. மேலும் இப்படத்தில் லீட் ரோலில் நடிக்க உள்ளார் அமீர் என்ற அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள் போன்ற மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

இந்த அறிவிப்பு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் அமீர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமீர் - யுவன் கூட்டணி என்றுமே ஒரு வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது என்பதற்கு உதாரணமாக ராம், மௌனம் பேசியதே, ஆதிபகவன், யோகி என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget