Mysskin: யுத்தம் செய் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இவரா? உண்மையை உடைத்த மிஷ்கின்
யுத்தம் செய் படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது யார்? என்பதை இயக்குனர் மிஷ்கின் மனம் திறந்து கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல வித்தியாசமான படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது.
சேரன் போலீஸ் அதிகாரி வேடத்தில் மிஷ்கின் இயக்கிய படம் யுத்தம் செய். இந்த படத்தில் முதன்முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது யார்? என்பது குறித்து மிஷ்கின் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
யுத்தம் செய் படத்தின் ஹீரோ இவரா?
மிஷ்கின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "யுத்தம் செய் படத்துல சேரன் கதாநாயகன் இல்லை. நான் எழுதுனது ராமராஜனுக்கு. கதை ஆரம்பிக்கும்போது ராமராஜன் ஒரு சிஐடி ஆஃபீசரா இருந்தா எப்படினு யோசிக்குறேன். என் உதவியாளர்கள் எல்லாம் ஒத்துக்கவே இல்லை. என்ன சார் இப்படி சொல்றீங்க?னு கேட்டாங்க.

நான் ஏன்டா பண்ணக்கூடாது. மதுரையில இருந்து வந்த ஒருத்தரு. தத்தக்கா பத்தக்கானு இங்கிலீஷ் பேசுறாரு. ஆனா, சரியான அறிவாளியா ஏன்டா இருக்கக்கூடாது. எவ்வளோ பேர் போலீஸ்காரங்க எனக்குத் தெரியும்டா. ரொம்ப ரொம்ப அறிவானவங்க. மெட்ராஸ்ல உள்ள வழக்குகளை கண்டுபிடிக்க திருநெல்வேலியில் இருந்து, தூத்துக்குடியில இருந்து, மதுரையில இருந்து வந்த விசாரணை பண்ணி முடிச்சுருக்காங்க. இன்னைக்கும் இருக்கு.
அதிர்ச்சியில் உறைந்த தயாரிப்பாளர்:
எழுதிட்டு போயிட்டு நான் அகோரம் சார்கிட்ட கதை சொல்றேன். கதை ரொம்ப பிடிச்சுருச்சு. ரொம்ப அருமையா இருக்கு கதை. யாரு ஹீரோனு கேட்டாரு? நான் ராமராஜன்னு சொன்னேன். தம்பி அப்படினு நிக்குறாரு. சார் அப்போ சேரன் சார் அப்படினு சொன்னவுடன் அப்பானு அப்படினு உக்காந்தாரு. அப்புறம்தான் சேரன்கிட்ட போனேன்.
சேரன்கிட்ட போய் கதை சொன்னப்பவும் இந்த சிக்கல். சேரன் என்கிட்ட கேக்குறாரு டேய் நீ என் படம் எல்லாம் பாத்துருக்கியா? இல்ல சார். நான் ஒரு படம் பாத்தேன். ஆட்டோகிராஃப் பாத்தேன். நான் தூங்கிட்டேன் சார். அதுனால பாக்கல சார். அவரு சிரிச்சுட்டு நான் பண்ணுவேனாடா? துப்பாக்கி எல்லாம் தூக்க முடியுமாடா? அப்படினு கேட்டாரு. சார் நீங்க வாங்க. நான் உண்மையான போலீஸ்காரங்களை வச்சுருக்கேன். ட்ரெயினிங் எல்லாமே நான் பண்ணித்தர்றேன்."
இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்.
கிரைம் த்ரில்லர்:
கல்பாத்தி அகோரம் தயாரித்த இந்த படத்தில் சேரனுடன் தீபாஷா, ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், செல்வா, ஸ்ருஷ்டி டாங்கே, இனியா ஆகியோர் நடித்திருப்பார்கள். கே இசையைமத்திருப்பார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருப்பார். காகின் எடிட் செய்திருப்பார். கடந்த 2011ம் ஆண்டு இந்த படம் வெளியானது.

அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், அதை விசாரிக்கும் அதிகாரி என்பதே கதைக்களம். மிகவும் வித்தியாசமான திரைக்கதையால் இந்த படம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. மேலும், இந்த படத்தில் சேரன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரின் நடிப்பு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.






















