மேலும் அறிய
Advertisement
Yezhu Kadal Yezhu Malai First Single: காதலர் தின ஸ்பெஷல்! ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாடல் பிப்.14 ரிலீஸ்!
Yezhu Kadal Yezhu Malai First Single: ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’, வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Yezhu Kadal Yezhu Malai First Single: ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு கடல் ஏழு மலை:
தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைச்சொல்லியான இயக்குநர் ராம் தற்போது எடுத்திருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை. நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 4000 ஆண்டு கால காதலை கூறும்படிமாக ஏழுமலை, ஏழு கடல் இருக்கும் என்ற அதன் கிளிம்ஸ் வீடியோக்கள் கூறுகின்றன.
ரயிலில் நகரும் கதையில் அஞ்சலியிடம் தனது கனவு காதலை நிவின்பாலி விவரித்து வருகிறார். தனதுக்கு 8 ஆயிரத்தை விட அதிக வயதாகிறது என்று கூறி அதிர்ச்சி அளிக்கும் நிவின்பாலி காதலில் உருகுகிறார். காதல் மட்டுமில்லாமல் தனிமனித நெருக்கடி, உலகமயமாதல் உள்ளிட்டவற்றை கூறும் ஏழு கடல் ஏழுமலை படம் பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறது.
காதலர் தின ஸ்பெஷல்:
‘ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’, வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
#YezhuKadalYezhuMalai First Single #MarubadiNee Releasing On FEBRUARY 14 At 6PM❤️🫶🏾✨
— Karthik Ravivarma (@Karthikravivarm) February 10, 2024
Stars : Nivin Pauly - Anjali - Soori
Music : Yuvan Shankar Raja
Direction : Ram
Theatrical Release Soon pic.twitter.com/VYU6M566HE
தனது வித்யாசமான படைப்புகளால் ரசிகர்கள் மனதில் இயக்குநராக தனி இடம் பிடித்தவர் ராம். தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களின் ராமின் திரைக்கதை மற்றும் இயக்கத்தின் மகுடங்கள் என்றே கூறப்படுகிறது. கடைசியாக 2018ம் ஆண்டு ராம் இயக்கத்தில் பேரன்பு படம் ரிலீசானது. அதைத்தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஏழு கடல் ஏழு மலை படம் ரிலீசாக உள்ளது. இந்த படமும் வித்தியாசமான அணுகுமுறையில் வாழ்க்கையை கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் நடிப்பில் அசத்தும் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி கூட்டணியில் படம் உருவாகி இருப்பதால் மூன்று பேர் மட்டுமே திரைக்கதையில் இருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்று ரசிகர்கள் கருத்துகின்றனர்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion