Women's Day special | ''நானும் அக்ஷராவும் கஷ்டங்களை சந்திச்சிருக்கோம் ..நான் unluckyனு சொன்னாங்க'' - ஸ்ருதிஹாசன்
சினிமாவுல நடிக்க வந்த பிறகு டைப் காஸ்ட் செய்யப்பட்டேன். அதாவது நான் தொடர்ச்சியாக கிளாமர் ரோல்ல நடிக்க மட்டும்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டதா உணர்ந்திருக்கேன்.
தமிழ், தெலுங்கு , இந்தி படங்களில் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் என்னும் மிகப்பெரிய நட்சத்திரத்தின் வாரிசாக இருந்தாலும் , தனது சொந்த முயற்சியால் சினிமாவில் சாதிக்க போராடிக்கொண்டிருக்கிறார். ஒரு பிரபலத்தின் குடும்ப பிண்ணனியில் இருப்பது சிறு வயதில் தனக்கு எத்தகைய தாக்கத்தையும் , மனநிலையில் மாற்றத்தையும் ஏற்படுத்தியது என பல இடங்களில் ஸ்ருதி பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில் தான் சினிமாவில் பெண்ணாக சந்தித்த சவால்களையும் , தன் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பெண் யார் என்பது குறித்தும் பெண்கள் தின ஸ்பெஷலாக பிங்க் வில்லாவுடன் பகிர்ந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
View this post on Instagram
" நான் நடிக்க வந்தப்போ உன்னுடைய முகத்தை பார்த்தா குடும்ப பெண்ணுக்கான முகம் இல்லைனு சொன்னாங்க. குடும்ப கதாபாத்திரங்களுக்கு பொருந்தமாட்டானு சொன்னாங்க. என்னால முடியாது, செய்ய மாட்டானு சொன்ன பலரை நான் கடந்து வந்துருக்கேன். முடியாதுனு சொல்லுறது அவங்களோட கருத்து. அது என்னை ஒருபோதும் தடுக்காது. சினிமாவுல நடிக்க வந்த பிறகு டைப் காஸ்ட் செய்யப்பட்டேன். அதாவது நான் தொடர்ச்சியாக கிளாமர் ரோல்ல நடிக்க மட்டும்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டதா உணர்ந்திருக்கேன். முதல் படத்துல நான் நல்லா நடிக்கல ஒப்புக்கொள்கிறேன். ஆனால்அதுக்காக எனது சினிமா பயணங்களில் எனது பெற்றோரின் உதவியை நான் கோரவில்லை. எனக்கு ரொம்ப டைம் எடுத்துச்சு.
நான் சொந்தமாக என்னுடைய முயற்சியில் சினிமாவில் டிராவல் பண்ணி வந்தவள் என்பதில் மகிழ்ச்சி. நான் சந்திக்கும் நபர்கள் சிலர் என் முகத்துக்கு நேராகவே சொல்லுவார்கள் , நிகழ்ச்சிக்கு போகும் பொழுது கருப்பு உடை அணியாதே , கொஞ்சம் சத்தமா பேசு “ இப்படியெல்லாம். ஆனால் நான் எனக்கு உண்மையாக இருக்க விரும்பினேன் . எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். மற்றவர்கள் சொல்லும் கருத்திலோ , ஆலோசனைகளிலோ உண்மையான அக்கறை இருந்தால் நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனங்களை எனக்கு வழங்குபவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். நான் தெலுங்கு படத்துல நடித்த பொழுது , முதல் இரண்டு படங்களும் தோல்வியடைந்தது. அதுக்காக என்னை அதிர்ஷ்டம் இல்லாதவள்னு சொன்னாங்க. அந்த இரண்டு படத்துலையும் ஒரே ஹீரோதான் ஆனால் அவரை குறை சொல்லல. 3 வது படம் பண்ண பொழுது என்னை அதிர்ஷ்டக்காரினு சொன்னாங்க. நான் தெலுங்கு இண்டஸ்ட்ரியை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர்கள் எனக்கு வீடு போன்ற உணர்வை எப்போதுமே கொடுப்பாங்க.
View this post on Instagram
எனக்கும் அக்ஷராவுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த பந்தம் உள்ளது, ஏனென்றால் நாங்கள் கடினமான காலங்களை ஒன்றாகப் பார்த்திருக்கிறோம், அது எங்களுக்கு மட்டுமே தெரியும். இதுவே உலகில் உள்ள ஒவ்வொரு உடன்பிறப்புகளும் ஒருவரையொருவர் வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன் . சின்ன வயசுலேயே அக்ஷ்ரா எனக்கு ஆதரவா இருப்பா. நான் என் வாழ்நாள்ல கிடைத்த அற்புதமான பெண்” என தனது நினைவுகளை அசைப்போட்டுள்ளார் சுருதிஹாசன்