மேலும் அறிய

Valimai Update: ’அக்டோபரில் திரையரங்குகளைத் தெறிக்கவிட வரும் வலிமை!’

இயக்குநர் ராஜமௌலியின் திரைப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளுக்கு வரவிருப்பதை அடுத்து போனிகபூர் இதனை முடிவுசெய்துள்ளதாக வட்டாரங்கள் தகவல்

அக்டோபரில் ரிலீசாகிறதா வலிமை! - வட்டாரங்கள் சொல்வது என்ன? 

போனி கபூர் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என தயாரிப்பு வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக திரைப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளைத் தெறிக்கவிடும் என அஜீத் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது முன்னதாகவே ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தின் டீசர் சுதந்திர தினத்தன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

மற்றொருபக்கம் இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான RRR இந்தியா முழுவதும் தீபாவளி அன்று ரிலீஸாகும் நிலையில் திரையரங்குகளில் 100 சதவிகிதம் மக்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பக்கம் தமிழ்நாட்டில் அதே தேதியில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படமும் திரையரங்குகளை எட்டவிருக்கிறது. இது இரண்டையும் கணித்தே போனி கபூர் அக்டோபர் 13 அன்று வலிமை திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.  அஜீத்துக்கான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மார்க்கெட்டை நோக்கமாகக் கொண்டே இதனை போனிகபூர் திட்டமிட்டுருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அஜித்தின் நடிப்பில்  ‘வலிமை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேற மாறி’ லிரிக் வீடியோ பாடலை 90 லட்சம் பார்வையார்கள் கண்டு ரசித்து வருகின்றனர். 


நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டது. இப்போது, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று இரவு வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.


இந்த நிலையில்,  ‘வலிமை’ படத்தின் முதல் பாடல்  ‘நாங்க வேற மாறி’ பாடலின் லிரிக் வீடியோ கடந்த 2ஆம் இரவு 10.45 மணியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அத்துடன் அஜித் கை கட்டி நிற்பது போன்ற ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தப் பாடலின் லிரிக் வீடியோவின் யூடியூப் லிங்கை சோனி மியூசிக் வெளியிட்டது. அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, சொன்ன நேரத்தில் ‘நாங்க வேற மாறி’  பாடல் வெளியானது. இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்த இந்தப் பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தத்துவப் பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘நாங்க வேற மாறி’ லிரிக் வீடியோ பாடலை 90 லட்சம் பார்வையார்கள் கண்டு ரசித்துள்ளனர். யூடியூப் டிரெண்டில் நம்பர் ஓன் இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன் 1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
Embed widget