Shruti haasan: பிறந்தநாள்ல அப்பா கூட இருக்க முடியல.. இதுதான் காரணம்.. வருத்தமுடன் பேசிய ஷ்ருதிஹாசன்!
அப்பாவின் பிறந்தநாளில் அவருடன் இருக்க முடியாததை நினைத்து வருந்தியதாக நடிகை ஷ்ருதிஹாசன் பேசியிருக்கிறார்.
அப்பாவின் பிறந்தநாளில் அவருடன் இருக்க முடியாததை நினைத்து வருந்தியதாக நடிகை ஷ்ருதிஹாசன் பேசியிருக்கிறார்.
நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன். இவர் தனது 68 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
அதனை முன்னிட்டு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பார்ட்டியில் கமல்ஹாசனின் நண்பர்கள், இயக்குநர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
In this world of glitz and glamour, where there are men all around…. You Sir are a true Gentleman. Happy bday Kamal sir @ikamalhaasan💫🧚🏼
— Bindu Madhavi (@thebindumadhavi) November 7, 2022
*you know how to make a lady feel special❤️🤗 pic.twitter.com/M6fyLBnCPm
இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன் அப்பாவின் பிறந்தநாளில் அவருடன் இருக்க முடியாததை நினைத்து வருந்துவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், “ என்னுடைய அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்பாராத விதமாக, நான் இந்தியாவில் இல்லை. ஷூட்டிங்கில் மாட்டிக்கொண்டேன். வருத்தமாக இருக்கிறது. அதனால் நான் இங்கிருந்தே என அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
View this post on Instagram
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் கமல் 234 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக்கூட்டணி இணைவதால், இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அதே போல விக்ரம் படத்தின் 100 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினருக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.