VJ Archana: இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் To ராஜா ராணி வில்லி.. அதகளப்படுத்தும் ஆங்கர்.. யார் இந்த விஜே அர்ச்சனா?
சினிமாவின் மீது கொண்ட ஆசையால் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தனது வீடியோக்கள் மூலம் கவனம் பெற்ற அர்ச்சனா விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
![VJ Archana: இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் To ராஜா ராணி வில்லி.. அதகளப்படுத்தும் ஆங்கர்.. யார் இந்த விஜே அர்ச்சனா? Who is VJ Archana, raja rani 2 serial actress vj archana untold story, bio, interesting facts VJ Archana: இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் To ராஜா ராணி வில்லி.. அதகளப்படுத்தும் ஆங்கர்.. யார் இந்த விஜே அர்ச்சனா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/4002855a1a95de3d55d83aecf338ac56_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சினிமா நடிகைகளுக்கு இருப்பது போலவே, சீரியல் நடிகைகளுக்கும் தற்போது ரசிகர்கள் பெருகி வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய சீரியல் வட்டாரத்தில் அதிகமான ரசிகர்களை ஈர்த்து வருபவர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் விஜே அர்ச்சனா. ஆல்யா மானசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் வில்லியாக வி.ஜே அர்ச்சனா நடித்து வருகிறார்.
View this post on Instagram
சென்னையை சேர்ந்த வி.ஜே அர்ச்சனா, சென்னையிலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் சினிமாவின் மீது கொண்ட ஆசையால் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தனது வீடியோக்கள் மூலம் கவனம் பெற்ற அர்ச்சனா விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
View this post on Instagram
அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அர்ச்சனா சமூக வலைதளங்களிலும் கவனம் செலுத்தி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் அவருக்கு, விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பின் மூலம் தற்போது ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.இதுமட்டுமன்றி விஜய்டிவியின் முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)