ஓணம் ரீல்ஸ் போட்டு வைரலாகும் வெங்கட் பிரபு பட நடிகை...யார் இந்த சனா அல்தாஃப் ?
Sana Althaf : ஓணம் ரீல்ஸ் வெளியிட்டு சமூக வலைதளத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் சனா அல்தாஃப். இவர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஓணம் பண்டிகையின் போது ரீல்ஸ் வெளியிட்டு சமூக வலைதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறார் நடிகை சனா அல்ஃதாப். மலையாளம் மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் இந்த ரீல்ஸ் மூலம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
இஸ்டாகிராமில் வைரலான சனா அல்தாஃப்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சனா அல்தாஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பர்களுடன் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டார். கூலி படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து இளையராஜாவின் 'வா வா பக்கம் வா' பாடல் மிக பிரபலமாகியுள்ளது பலர் இந்த பாடலை வைத்து ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். ஓணம் பண்டிகையின் போது தனது நண்பர்களோடு சேர்ந்து இந்த பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டார் சனா அல்தாஃப் . இந்த ரீல்ஸில் பலரது கவனத்தை ஈர்க்க யார் இந்த பெண் என பலரும் சமூக வலைதளத்தில் கேட்கத் தொடங்கியுள்ளார்கள் . இவரது இன்ஸ்டாகிராம் ஐடியை கண்டுபிடித்து அதை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள் நெட்டிசன்கள்.
View this post on Instagram
யார் இந்த சனா அல்தாஃப்
கேரளாவின் கொச்சியில் அல்தாஃப் மற்றும் ஷமீனா அல்தாஃப் ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் தான் சனா அல்தாஃப். இவர் கொச்சியில் உள்ள பவனின் ஆதர்ஷா வித்யாலயாவில் பயின்றார். சினிமாவில் நடிகையாக அறிமுகாமவதற்கு முன்பு தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தார். 'விக்ரமாதித்யன்' படத்தில் துல்கர் சல்மானின் சகோதரியாக நடித்ததன் மூலம் இவர் திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது அத்தை சஜ்னா நஜாம் மூலம் இந்த வேடம் அவருக்குக் கிடைத்தது. பின்னர் அவர் ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக மரியம் முக்கு படத்தில் சலோமி என்ற கதாநாயகியாக நடித்தார். மேலும் ராணி பத்மினி படத்தில் மலையேற்ற வீராங்கனையாகவும் நடித்தார். பின்னர் அவர் ஃபர்ஹான் பாசிலுடன் பஷீரின்டே பிரேமலேகனம் படத்தில் சுஹ்ராவாக நடித்தார். ஒடியனில் மஞ்சு வாரியரின் சகோதரி மீனாட்சியாக நடித்தார்.
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் அனுராதாவாக தமிழில் அறிமுகமானார். பின்னர் ஆர்கே நகர் படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மலையாள நடிகர் ஹக்கிம் ஹாஜகான் என்பவரை பதிவு திருமணம் செய்துகொண்டார் சனா அல்தாஃப்





















