![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: பிறந்தநாள் கொண்டாடும் தெறி பேபி… 11 வது பிறந்தநாள் கொண்டாட்ட விடியோவை வெளியிட்ட நடிகை மீனா!
நடிகை மீனா தன் மகள் நைனிகாவின் புகைப்படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் பழக்கம் உடையவர். ஜனவரி 1 ஆம் தேதியான நேற்று பேபி நைனிகா தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடும் விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
![Watch Video: பிறந்தநாள் கொண்டாடும் தெறி பேபி… 11 வது பிறந்தநாள் கொண்டாட்ட விடியோவை வெளியிட்ட நடிகை மீனா! Watch Video: Birthday Celebration of baby nainika 11th Birthday Celebration Video from Actress Meena Watch Video: பிறந்தநாள் கொண்டாடும் தெறி பேபி… 11 வது பிறந்தநாள் கொண்டாட்ட விடியோவை வெளியிட்ட நடிகை மீனா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/f07579961b835638f7b17b0034c5a9fb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா. நடிகை மீனா என்றதுமே கொஞ்சும் தமிழும், குழந்தை சிரிப்பும், குறும்புத்தனமான நடிப்பும்தான் பலருக்கும் முதலில் நினைவில் வரும். 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'முத்து', 'எஜமான்', 'ரிதம்', 'அவ்வை ஷண்முகி', 'த்ரிஷ்யம்' என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையில், கதாநாயகி ஆக முப்பது வருடங்களை சமீபத்தில் நிறைவு செய்திருக்கிறார் மீனா.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. அந்த பேபி நைனிகாதான் தெறி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு மகளாக விஜயை பேபி பேபி என்று அழைத்து க்யூட் பேபி என்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான ‘தெறி ‘திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை மீனா தன் மகள் நைனிகாவின் புகைப்படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் பழக்கம் உடையவர். ஜனவரி 1 ஆம் தேதியான நேற்று பேபி நைனிகா தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடும் விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அதற்கான விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை மீனா. அந்த வீடியோவில் இரவு நேரத்தில், இரவு உடையில் வரும் நைனிகாவுக்கு சர்ப்ரைஸாக வீடு முழுவதும் பலூன் கட்டப்பட்டு உள்ளது. அதனை பார்த்து சந்தோஷம் அடைந்த நைனிகா நடந்து வந்து ஒரு பலூனை பிடித்து விளையாடுகிறார். பின்னர் டேபிளில் வைக்கப்பட்டிருக்கும் கேக்கை உற்று பார்த்துவிட்டு அமர்ந்து கேக் வெட்டுகிறார். அந்த விடியோவிற்கு கீழே நடிகை மீனா, "ஹேப்பி பர்த்டே பேபி, கடவுள் உனக்கு எல்லா நன்மைகளுடனும் ஆசீர்வாதத்தை வழங்கட்டும், என் அன்புகள்!" என்று கேப்ஷன் இட்டுள்ளார். கமெண்டுகளில் ரசிகர்கள் பேபி நைனிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)