Watch Video: நான் பெத்த தாயே... க்யூட் வீடியோ வெளியிட்டு மகளிர் தின வாழ்த்து கூறிய சூரி
International Women's Day: 2022 மகளிர் தினத்தன்று உங்களை ஊக்குவிக்கும், உங்களுக்கு அன்பு செலுத்தும் பெண்களுக்கு வாழ்த்துகள், செய்திகள் மற்றும் மேற்கோள்களை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை குறிக்கிறது. 2022 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் "சார்புநிலையை முறியடி" என்பதாகும்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரபலங்கள், சாமானியர்கள் என அனைவரும் அவர்களது வாழ்வின் முக்கிய பெண்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில், “Verified என்ன பெத்த தாய் க்கும், நான் பெத்த தாய் க்கும் மற்றும் எல்லா தாய்மார்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் #மகளிர்_தினம் #womensday💐❤️” என பதிவிட்டிருக்கிறார்.
வீடியோவை காண:
View this post on Instagram
சர்வதேச மகளிர் தினத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘பாலின சமத்துவ உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். சார்பு, ஒரே மாதிரியான மற்றும் பாகுபாடு இல்லாத உலகம். பலதரப்பட்ட, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய உலகம். வித்தியாசத்தை மதிக்கும் மற்றும் கொண்டாடும் உலகம். ஒன்றாக இணைந்து பெண்களின் சமத்துவத்தை உருவாக்க முடியும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 மகளிர் தினத்தன்று உங்களை ஊக்குவிக்கும், உங்களுக்கு அன்பு செலுத்தும் பெண்களுக்கு வாழ்த்துகள், செய்திகள் மற்றும் மேற்கோள்களை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்