மேலும் அறிய

Nadigar teaser: இணையத்தில் ட்ரெண்டாகும் டொவினோ தாமஸின் ”நடிகர்” பட டீசர்!

டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள நடிகர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது

 டேவிட் படிக்கல் என்கிற கற்பனை நடிகர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் நடிகர். அப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

டொவினோ தாமஸ்

மலையாள திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயாநதி , மின்னல் முரளி , தல்லுமாலா ஆகிய படங்கள் இவருக்கு வெகுஜனத் திரையில் கவனம் பெற்றுத்தந்த படங்களாக அமைந்தன. தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக அறிமுகமானார் டொவினோ தாமஸ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 2018 படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றதுடன் பலவிருதுகளை வென்று பாக்ஸ் ஆஃபீஸிலும் சாதனை படைத்தது. இந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடித்து வெளியான அன்வேஷிப்பின் கண்டேதும் படமும் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்றது. மின்னல் முரளி 2 , த்ரிஷாவுடன் ஐடண்டிடி என பல்வேறு படங்களில் நடித்து வரும் டொவினோ தாமஸ் தற்போது நடித்துள்ள படம் நடிகர்.

நடிகர்

 மலையாளத்தில் ’டிரைவிங் லைசன்ஸ்’ மற்றும் ’ஹனி பீ ‘ ஆகிய படங்களை இயக்கிய லால் ஜூனியர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நடிகர் படத்தில் டொவினோ தாமஸ் , ரோமான்ச்சம் , மஞ்சுமெல் பாய்ஸ் புகழ் செளபின் சாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். வீணா நந்தகுமார், தியான் ஸ்ரீனிவாசன், அனூப் மேனன், ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, லால் மற்றும் மதுபால் ஆகியவர்கள் இப்படத்தில் பிற கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்கள். மலையாள சூப்பர்ஸ்டாராக இருக்கும் டேவிட் படிக்கல்லின் என்கிற கற்பனை கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு முதலில் நடிகர் திலகம் என்று பெயர் வைக்கப் பட்டிருந்தது. நடிகர் திலகம் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் தான். இந்த பட்டத்தின் மேல் தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய செண்டிமெண்ட் இருப்பதால் படத்தின் பெயரை மாற்றச் சிவாஜியின் மகன் நடிகர் பிரபு படக்குழுவுக்கு வேண்டுகோள் வைத்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் திலகம் என்கிற டைட்டிலை நடிகர் என்று மாற்றியது படக்குழு. கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகளில் உள்ளது. இப்படியான நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் டீசர்

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி இந்தப் படத்தை டிரைலரை வெளியிட்டுள்ளார்.  மிகப்பெரிய ஸ்டாராக இருந்து டேவிட் படிக்கல் புகழின் உச்சத்திற்கு சென்று பின் தனது பழக்கவழக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திப்பதை இந்த ட்ரெய்லர் சுருக்கமாக காட்டுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன? - விளக்கமாக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன? - விளக்கமாக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
அரசியலில் இறங்க போகிறாரா தாடி பாலாஜி? என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்க!
அரசியலில் இறங்க போகிறாரா தாடி பாலாஜி? என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்க!
Breaking News LIVE: ஆந்திர தலைநகர் இனி அமராவதிதான்;  3 தலைநகரங்கள் கிடையாது: சந்திரபாபு நாயுடு
ஆந்திர தலைநகர் இனி அமராவதிதான்; 3 தலைநகரங்கள் கிடையாது: சந்திரபாபு நாயுடு
கடத்தப்பட்ட 5 மாத குழந்தை: இரண்டே மணிநேரத்தில் மீட்ட போலீசார்: எப்படி? குவியும் பாராட்டு!
கடத்தப்பட்ட 5 மாத குழந்தை: இரண்டே மணிநேரத்தில் மீட்ட போலீசார்: எப்படி? குவியும் பாராட்டு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi DMK Parliamentary leader | கனிமொழி தான் தலைவர்!ஸ்டாலின் போடும் கணக்கு! அதிரும் டெல்லிTrichy airport new terminal |திருச்சியில் புதிய முனையம்! விமானத்துக்கு வாட்டர் சல்யூட்Chandrababu and Nitish kumar | சபாநாயகருக்கு டார்கெட்! சந்திரபாபு, நிதிஷின் ப்ளான்! பின்னணி என்ன?PM Modi Cabinet | முரண்டு பிடிக்கும் கூட்டணியினர்! தலைவலியில் பாஜக! அமைச்சரவை பூகம்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன? - விளக்கமாக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன? - விளக்கமாக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
அரசியலில் இறங்க போகிறாரா தாடி பாலாஜி? என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்க!
அரசியலில் இறங்க போகிறாரா தாடி பாலாஜி? என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்க!
Breaking News LIVE: ஆந்திர தலைநகர் இனி அமராவதிதான்;  3 தலைநகரங்கள் கிடையாது: சந்திரபாபு நாயுடு
ஆந்திர தலைநகர் இனி அமராவதிதான்; 3 தலைநகரங்கள் கிடையாது: சந்திரபாபு நாயுடு
கடத்தப்பட்ட 5 மாத குழந்தை: இரண்டே மணிநேரத்தில் மீட்ட போலீசார்: எப்படி? குவியும் பாராட்டு!
கடத்தப்பட்ட 5 மாத குழந்தை: இரண்டே மணிநேரத்தில் மீட்ட போலீசார்: எப்படி? குவியும் பாராட்டு!
Aishwarya Arjun - Umapathy: மூணு முடிச்சு போட்டாச்சு.. நடந்து முடிந்த ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி திருமணம்!
Aishwarya Arjun - Umapathy: மூணு முடிச்சு போட்டாச்சு.. நடந்து முடிந்த ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி திருமணம்!
Vikravandi By Election: விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா.. வேட்பாளரை அறிவித்த திமுக..!
விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா.. வேட்பாளரை அறிவித்த திமுக..!
Minister Masthan: அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஷாக் - விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு - திமுக அதிரடி
Minister Masthan: அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஷாக் - விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு - திமுக அதிரடி
Actor Charlie: சார்லி வீட்டில் கெட்டிமேளம்... வாழ்த்திய முதலமைச்சர் - வைரலாகும் புகைப்படங்கள்
Actor Charlie: சார்லி வீட்டில் கெட்டிமேளம்... வாழ்த்திய முதலமைச்சர் - வைரலாகும் புகைப்படங்கள்
Embed widget