Priyanka Chopra | மார்வெல் நட்சத்திர நண்பர்களுடன் டின்னர் டேட் ! - வைரலாகும் பிரியங்கா சோப்ரா புகைப்படங்கள் !
புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் மார்வல் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகின்றனர்.
பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இவரின் முதல் திரைப்படமான தமிழனில் , நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் பாலிவுட்டிற்கு சென்றார். அங்கு தனது திறமையால் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் நடிக்க தொடங்கி தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது ஹாலிவுட் நண்பர்களுடன் , லண்டனின் உணவு விடுதி ஒன்றில் டின்னர் சமயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதற்கு கேப்ஷனாக “குழந்தைகளின் இருக்கையில் உங்களுக்கு இடம் கிடைத்தபொழுது “ என குறிப்பிடுள்ளார். அந்த புகைப்படத்தில் ஆக்வாஃபினா மற்றும் மைக்கேல் யோவ், சாண்ட்ரா ஓ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சாண்ட்ரா ஓ , கிரே அனாட்டமி என்ற திரைப்படம் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் ரெஸ்டாரண்டில் ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ ஆகியவை ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram
புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் மார்வல் தயாரிப்பில் உருவாகி வரும் ஷாங் சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் (Shang-Chi and The Legends Of The Ten Rings) படத்தில் நடித்து வருகின்றனர். முதல் ஆசிய மார்வல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. இதில் ஆக்வாஃபினா கேட்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் இதுவரை கண்டிராத வித்தியாசமான கதைக்களத்துடன், இளம் சூப்பர் ஹீரோவின் சாகச பயணங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவும் நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் வதந்தியாகவே கடந்துவிட்டது.
📸| @priyankachopra at a restaurant with Sandra Oh, Michelle Yeoh, Awkwafina, Paul Feig and his Wife tonight in London pic.twitter.com/GkLPuHxhDy
— PRIYANKA DAILY (@PriyankaDailyFC) August 14, 2021
Video: @priyankachopra at a restaurant with Sandra Oh, Michelle Yeoh, Awkwafina, Paul Feig and his Wife tonight in London 💕 pic.twitter.com/Ki8pYb8VXx
— PRIYANKA DAILY (@PriyankaDailyFC) August 14, 2021
பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் நடிகரும் , பாடகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்துக்கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது லண்டன் மாநகரின் முக்கிய பகுதியில் இவருக்கென சொந்தமான ஒரு ரெஸ்டாரண்டும் உள்ளது. இதில் மேற்கத்திய உணவுகள் மட்டுமல்லாமல் இந்திய உணவுகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.பிரியங்கா சோப்ரா தற்போது ஆலியா பட் மற்றும் கேத்ரீனா கைஃப் என மூன்று பேரும் இணைந்து 'ஜீ லே ஸரா' என்கிற படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.