Dadasaheb Phalke Award 2023: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு “தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு..!
பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
![Dadasaheb Phalke Award 2023: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு “தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு..! Waheeda Rehman Declared Winner of 2023 Dadasaheb Phalke Lifetime Achievement Award Dadasaheb Phalke Award 2023: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு “தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/26/dd45e8637293f97d7b7c57c9cddf5d2b1695713590357572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் 1969 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை நடிகர்கள் அமிதாப்பச்சன், அசோக் குமார், ராஜ்குமார், திலீப் குமார், சிவாஜி கணேசன்,வினோத் கண்ணா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித் ராய், கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர்.
இதனிடையே 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்தி நடிகை ஆஷா பரேக் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கடந்தாண்டு விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர்.
பாலிவுட்டின் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் வஹீதா ரஹ்மானும் ஒருவர். பரதநாட்டிய கலையை முறைப்படி கற்ற நிலையில், சிறு வயதில் மருத்துவராக அவர் விரும்பினார். ஆனால் தந்தையின் மறைவு அவரை சினிமாவில் நடிப்பதற்காக அழைத்து வந்தது. குடும்ப பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு 1955 ஆம் ஆண்டு ரோஜுலு மராயி என்ற தெலுங்கு படத்தில் எருவக சாகலோய் என்ற பாடலில் தான் வஹீதா ரஹ்மான் அறிமுகமானார்.
பின் 1956 ஆம் ஆண்டு ராஜ் கோஸ்லா இயக்கிய சிஐடி படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரீ கொடுத்த வஹீதா ரஹ்மான் ககாஸ் கே பூல், சாஹிப் பிவி அவுர் குலாம், கைடு, காலா பஜார், ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, ராம் அவுர் ஷியாம், ஆத்மி, தீஸ்ரீ கசம் மற்றும் காமோஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தமிழில் 1955 ஆம் ஆண்டு வெளியான காலம் மாறிப்போச்சு படத்தில் குரூப் டான்ஸராகவும், 1956 ஆம் ஆண்டு வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார். அதன்பிறகு பாலிவுட்டில் செட்டிலான வஹீதா ரஹ்மான், கிட்டதட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் பாலிவுட்டில் நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)