மேலும் அறிய

2022யை தன்வசமாக்க போராடும் விஷால்! - விஷால் 32, 33 மற்றும் 34 படங்களின் பேக் டு பேக் அப்டேட்!

விஷால் 32 வது படத்தின் போஸ்ட்புரடெக்‌ஷன் வேலைகளும் துரிதமாக நடைப்பெற்று வருவதால் படம் புத்தாண்டு பண்டிகையை குறி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால் . பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஆனாலும்  இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.படங்கள் நடித்த பொழுதே , விஷால் நடிகர் சங்கம் உள்ளிட்ட பல வேலைகளில் பிஸியாக இருந்ததால்தான் கதை தேர்வுகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர் அவருக்கு 
 நெருக்கமானவர்கள் . அதனால் அடுத்த வருடத்தை  தன் வசமாக்க போராடிக்கொண்டிருக்கிறாராம் விஷால். பேக் டு பேக் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள விஷால் தற்போது தனது நெருங்கிய நண்பரான ஆர்யாவுடன் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தை நடித்துக்கொடுத்துள்ளார். எனிமி படத்தில் ஆர்யா வில்லனாகவும், விஷால் ஹீரோவாகவும் நடித்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே. ஆர்யா - விஷால் காம்போவில் ஏற்கனவே அவன் இவன்  படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது உருவாகியுள்ள  எனிமி படம்  முதலில் ஆயுத பூஜையன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர்  தீபாவளி ரேஸுக்கு தயாராகிவிட்டது.


2022யை தன்வசமாக்க போராடும் விஷால்! - விஷால் 32, 33 மற்றும் 34 படங்களின் பேக் டு பேக் அப்டேட்!

விஷால் தற்போது  அறிமுக இயக்குநர்  வினோத் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஷாலின் 32 வது படமாக உருவாகி வருகிறது. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். வெகு நாட்களுக்கு பிறகு சோலோ ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எனிமி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கும் பொழுதே , வீரமே வாகை சூடும் படத்தின் படப்பிடிப்புகளிலும் விஷால் கலந்துக்கொள்ள தொடங்கிவிட்டார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. போஸ்ட்புரடெக்‌ஷன் வேலைகளும் துரிதமாக நடைப்பெற்று வருவதால் படம் புத்தாண்டு பண்டிகையை குறி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


2022யை தன்வசமாக்க போராடும் விஷால்! - விஷால் 32, 33 மற்றும் 34 படங்களின் பேக் டு பேக் அப்டேட்!

அதே போல விஷால் தனது 33 மற்றும் 34 வது படத்திலும் ஒப்பந்தமாகிவிட்டார். 33 வது படத்தை அறிமுக இயக்குநருக்கே கொடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் , திரிஷா இல்லைனா நயன்தாரா, பாகிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.படத்தை வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். வீரமே வாகை சூடும் படத்தின் ரிலீஸுக்கு பிறகு , சிறிது கால இடைவெளியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே போல விஷாலின் 34 வது படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவி நடித்த ’அடங்கமறு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget